சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால், தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்சு அலர்ட்: தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 13, 2024
மஞ்சள் அலர்ட்: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதன் காரணமாக, மழை அளவைப் பொருத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர்.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: தொடர் மழை காரணமாக பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை மழை: மக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்