ETV Bharat / state

கிண்டியில் கிடைத்த மனித எலும்பு கூடுகள் முதல் மதுபோதையில் வாலிபர்கள் செய்த ரகளை வரை.. - சென்னை குற்றச் செய்திகள்! - chennai crime news - CHENNAI CRIME NEWS

Chennai Crime News : கிண்டியில் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்டபோது கிடைத்த மனித எலும்புக்கூடுகள் முதல் மதுபோதையில் ரோட்டில் நடந்து சென்றவரிடம் வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் வரை, இன்றைய சென்னை குற்றச் செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 10:57 PM IST

சென்னை: கடந்த வருடம் கிண்டி மடுவாங்கறையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், அதே இடத்தில் மேலும் ஒரு வட மாநிலத்தவர் சிக்கி இருக்கக்கூடும் என போலீசார் தேடி வந்த நிலையில், அவரது உடல் கண்டெடுக்க இயலாத காரணத்தினால் அப்போது அந்த பணியானது கைவிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று அதே பகுதியில் கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டியபோது மனித எலும்புக்கூடு கிடைத்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, கடந்த வருடம் நேர்ந்த விபத்தில் காணாமல் போன வட மாநிலத்தவரின் எலும்பு கூடா இது என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைப்பற்றப்பட்ட எலும்புகளை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு ஆய்வுக்காக தடயவியல் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

வாலிபர் மின்சாரம் தாக்கி‌ படுகாயம் : சென்னை, திருவல்லிக்கேணி பிபி சாலை பகுதியில் வசிப்பவர் முனாப்(42). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளது. மேலும், முனாப் மது பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி பிரிந்து சென்ற நிலையில் இவர் மட்டும் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் முனாப் மதுபோதையில் தனது வீட்டருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய போது மின்சாரம் தாக்கி‌ கீழே விழுந்தார். இதில் அவரது முதுகு, இடுப்பு, வலது கையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் முனாப்பை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.‌ பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாட்டிலால் மண்டை உடைப்பு : சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள டீ கடை அருகே இரண்டு நபர்கள் மது அருந்திவிட்டு அவ்வழியே சென்று கொண்டிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதைப்பார்த்த அவ்வழியே வந்த மற்றொரு நபர் இதனை தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது நீ என்ன எங்களை கேள்வி கேட்கிறாய்? எனக் கூறி தட்டிக்கேட்ட நபரை கையால் தாக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் அருகே இருந்த கடையில் பிஸ்கெட் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து தலையில் ஓங்கி அடித்து விட்டு தப்பிச் சென்றனர். இதில், அந்த நபர் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாக்குலுக்கு உள்ளான நபர் நுங்கம்பாக்கம் சுதந்திர நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ் குமார் என்பதும், அவரை தாக்கிய நபர்களும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

மதுபோதையில் பாம்பை கையில் பிடித்த இளைஞர்: சென்னை திருமங்கலம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் அருண்(26). இவர் மதுபோதையில் ஜெஜெ நகரில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது குடியிருப்புக்குள் பாம்பு ஒன்று செல்வதைக் கண்ட அருண் மதுபோதையில் அந்த பாம்பை கையில் பிடித்ததாக தெரிகிறது.

அப்போது பாம்பு திடீரென அருண் கையில் கடித்ததால் உடனடியாக மயங்கி கீழே விழுந்தார். இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஜெஜெ நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : வீடு புகுந்து பாலியல் சீண்டல்.. கத்தி முனையில் மாமூல் வசூல்.. சென்னை க்ரைம் ஸ்டோரிஸ் - chennai crime

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.