சென்னை: தமிழ்நாடு போக்குவரத்துக் கழக மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது வெளியிடப்பட்ட போக்குவரத்து கொள்கை விளக்கக் குறிப்பில், "போக்குவரத்து துறைக்கு சொந்தமான எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 260 பேருந்துகள் மூலம் நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.76 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் வயது முதிர்ந்த பேருந்துகள் கழிவு செய்தல் தொடர்பான கொள்கை குறிப்பில், பேருந்தின் வயது, இயக்கப்பட்ட தூரம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
அதில், விரைவுப் பேருந்துகள் 7 ஆண்டுகளின் முடிவில் அல்லது 12 லட்சம் கி.மீ., தூரம் ஓடி முடித்தால் இவற்றில் எது முந்தையதோ, அதைக் கணக்கில் கொண்டு அந்த பேருந்துகள் மாற்றப்படும். இதேபோல், மற்ற அனைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் 9 ஆண்டுகளின் முடிவில் அல்லது 12 லட்சம் கி.மீ., ஓடி முடித்தல் இவற்றில் எது முந்தையதோ அதனை கணக்கில் கொண்டு மாற்றப்பட வேண்டும்.
ஆனால் 31.05.2024 அன்றுள்ளவாறு, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் வயது முதிர்ந்த பேருந்துகளின் எண்ணிக்கை 10,001 ஆக இருப்பதாகவும், இது மொத்த பேருந்துகளில் 49.60 விழுக்காடு" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக் கழகங்களில் மொத்தமுள்ள 20 ஆயிரத்து 260 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், அரசு கொள்கை விளக்கக் குறிப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 10,001 பேருந்துகள் காலாவதியான பேருந்துகளையே இயக்கிக் கொண்டிருப்பதாகப் போக்குவரத்துக் கழகத்தின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது, தமிழ்நாடு அரசு பேருந்துகளில் கிட்டதட்ட 50 விழுக்காடு பேருந்துகள் காலாவதியான பேருந்துகளே இயக்கப்படுவது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: “கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் மாநில அரசு எடுக்காது” - தமிழ்நாடு அரசு வாதம்! - freedom of expression