சென்னை : தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மை பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து வகையான பள்ளிகளிலும் மதம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகளை இனி நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
'பரம்பொருள்' என்கின்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்கின்ற நபர் அண்மையில் சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடத்திய மாணவர்களுக்கான போதனை நிகழ்ச்சியில், மூடநம்பிக்கை சார்ந்த கருத்துக்களை பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி மற்றும் சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் பணியிடமாறுதல் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் மதுமதி, "தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், சிறுபான்மை பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்டவற்றில் ஆன்மீகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தலைமையில் நடைபெறும் விசாரணை தொடர்பான அறிக்கையை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : பள்ளிகளில் ஆன்மீக வகுப்பு தவறா? பரம்பொருள் மகாவிஷ்ணுவின் பேச்சு சர்ச்சை ஆனது ஏன்? - முழு விபரம் - tn Schools mahavishnu speech issue