சென்னை: கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 151 குரூப்-2 மற்றும் 2 ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதில், 161 இடங்கள் நேர்முகத் தேர்வைக் கொண்ட பணியிடங்களாகவும், 5 ஆயிரத்து 990 காலி இடங்கள் நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டன.
-
Combined Civil Services Examination-II (Group-IIA Services)(Non-Interview Posts) (Notification No.03/2022) – Marks and Rank position in Interactive mode.
— TNPSC (@TNPSC_Office) April 8, 2024
For details, click :- https://t.co/081Aw8D49k pic.twitter.com/wEfhgB4vcR
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இதற்கான முதல்நிலைத் தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 50 ஆயிரம் பேர், அடுத்தக்கட்டமான முதன்மைத் தேர்வை எழுதினர். இதனையடுத்து, குரூப்-2 நேர்முகத் தேர்வு கொண்ட பணியிடங்களுக்கான முடிவுகள் மட்டும் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி அவர்களுக்கான பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2023 பிப்ரவரி 25 ஆம் தேதி நடைப்பெற்ற முதன்மைத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், 5 ஆயிரத்து 990 பணியிடங்கள் கொண்ட நேர்காணல் அல்லாத குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
1 பணியிடத்திற்கு 2.5 பேர் வீதம், சுமார் 14 ஆயிரத்து 500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் ஜாபர் சாதிக் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை - ED Raid In Jaffer Sadiq House