ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு! - TNPSC Group 2 Result - TNPSC GROUP 2 RESULT

TNPSC Group 2A Result: 5 ஆயிரத்து 990 பணியிடங்கள் கொண்ட நேர்காணல் அல்லாத குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC GROUP 2 RESULT
டிஎன்பிஎஸ்சி குரூப் 2
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 1:12 PM IST

சென்னை: கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 151 குரூப்-2 மற்றும் 2 ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதில், 161 இடங்கள் நேர்முகத் தேர்வைக் கொண்ட பணியிடங்களாகவும், 5 ஆயிரத்து 990 காலி இடங்கள் நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டன.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இதற்கான முதல்நிலைத் தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 50 ஆயிரம் பேர், அடுத்தக்கட்டமான முதன்மைத் தேர்வை எழுதினர். இதனையடுத்து, குரூப்-2 நேர்முகத் தேர்வு கொண்ட பணியிடங்களுக்கான முடிவுகள் மட்டும் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி அவர்களுக்கான பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2023 பிப்ரவரி 25 ஆம் தேதி நடைப்பெற்ற முதன்மைத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், 5 ஆயிரத்து 990 பணியிடங்கள் கொண்ட நேர்காணல் அல்லாத குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

1 பணியிடத்திற்கு 2.5 பேர் வீதம், சுமார் 14 ஆயிரத்து 500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் ஜாபர் சாதிக் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை - ED Raid In Jaffer Sadiq House

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.