சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-2 நிலையில் காலியாக உள்ள 507 இடங்களையும், அதேபோல் குரூப்-2ஏ நிலையில் காலியாகவுள்ள 1,820 இடங்களையும் நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஜூன் 20ஆம் தேதி வெளியிட்டது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்றுடன் (ஜூலை.19) முடிவடைகிறது. இன்று நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு மெயின் தேர்வு குரூப்-2 பணிகளுக்கு தனியாகவும், அதேபோல், குரூப்-2 ஏ பணிகளுக்கு தனியாகவும் நடத்தப்பட இருக்கிறது.
இதுவரை குரூப்-2 பணிகளுக்கு நேர்காணல் இருந்து வந்தது. தற்போது முதல் முறையாக குரூப்-2 ஏ பணிகளைப் போன்று குரூப்-2 பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அந்தெந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கி உள்ளன.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது. குரூப் 4 தேர்வில் இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் குருப் 2 தேர்வில் இதே முறை பயன்படுத்தப்பட உள்ளது. இந்த முறைப்படி ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து பின்னர் ஷெட்டில் அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை தேர்வு செய்ய கூடாது.
அப்படி குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். அதாவது மாற்றி சரியான விடையை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓஎம்ஆர் ஷீட்டில் எது சரியான விடையோ அதை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: கோவையில் மூன்றாம் இடம் பிடித்ததற்கு என்ன காரணம்? ஈபிஎஸ் முன்னிலையில் ஆலோசனை! - AIADMK executives meeting