சென்னை: தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியாளர் சார்நிலைப்பணிகளில் அடங்கிய இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு 22ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒருங்கிணைந்த பொறியாளர் சார்நிலைப்பணிகளில் தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியாளர் சார்நிலைப்பணிகளில் அடங்கிய இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு நேரடி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களைக் பெற்றது.
அதற்கான எழுத்துதேர்வு 2023 மே 27 ம் தேதி நடைபெற்றுது. எழுத்துத்தேர்வு மதிப்பெண மற்றும் தரவரிசை விவரங்கள் 2023 செப்டம்பர் 19 ம் தேதி தேர்வாணைய இணையத்தைதில் வெளியிடப்பட்டது. ஒருங்கிணைந்த பொறியாளர் சார்நிலைப்பணிகளில் தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியாளர் சாரநிலைப்பணிகளில் அடங்கிய இளநிலை வரைதொழில் அலுவலர் நெடுஞ்சாலைத்துறை பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 2024, பிப்ரவரி 22ஆம் தேதி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலத்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் , ஓட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கிட்டு விதி, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தேர்வானவர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடக்கிய அழைப்புக்கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in விருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விறகு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் E-mail மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துதேரவில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் ,ஒட்டுமொத்த தரவரிசை இடஒதுக்கீட்டு விடுகள்,விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.
எனவே அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: “நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்” அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!