ETV Bharat / state

மருத்துவருக்கு கத்திக்குத்து: மருத்துவர்கள் ஆங்காங்கே போராட்டம் - தொடரும் பதற்றம்!

கிண்டியில் பணியில் இருந்த மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 23 hours ago

சென்னை: கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் மருத்துவப் பிரிவின் மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் கண்டனத்துக்குரியது. இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்த மருத்துவரை தாக்கிய சம்பவத்தின் எதிரொலியாக, அவசர சிகிச்சை தவிர பிற சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ள மருத்துவர்கள், மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சேலம், கோவை மாவட்டங்களிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, மருத்துவரை தாக்கிய நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க கூட்டம் நடத்தி சில தீர்மானங்களை எடுத்துள்ளது. அதை கீழ்வருமாறு காணலாம்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க (TNGDA) தீர்மானங்கள்:

  • கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவரை தாக்கிய செயலை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
  • மருத்துவமனை பாதுகாப்புச் சட்டம் மற்றும் BNS குற்றவியல் சட்டத்தின் கீழ் மருத்துவரை கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
  1. அனைத்து மருத்துவமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
  2. பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் நுழைவுச் சீட்டிற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க: அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து; சென்னையில் பயங்கரம்!

மேலும், இதுகுறித்து தமிழ்நாடு எம்.ஆர்‌.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை கலைஞர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி பணியில் இருக்கும்போது, ஒருவர் கத்தியால் குத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

சமீப காலமாக மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மருத்துவத்துறையில் பணி செய்யும் ஊழியர்களை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பெரிய அளவில் நடக்கும்போது மட்டுமே அது விவாத பொருளாக மாறுகிறது.

ஆனால் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் அன்றாடம் மருத்துவ ஊழியர்கள் அச்சுறுத்தப்படுவதும், தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் சாதாரணமாகி விட்டது. மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தமிழ்நாடு அரசு தகுந்த சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.