ETV Bharat / state

பெற்றோர் கண்டிப்புடன் இல்லாமல் உறுதுணையாக இருந்தனர்.. பொறியியல் தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவி பேச்சு! - Engineering Cut off

TNEA Rank List 2024: மாணவர்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுத்தால் முன்னேற முடியும் என பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி தொசிதா லட்சுமி தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 2:58 PM IST

மாணவி தொசிதா லட்சுமி
மாணவி தொசிதா லட்சுமி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 12ஆம் தேதி வரை நடந்தது. மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் வீரராகவராவ் நேற்று பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

மாணவி தொசிதா லட்சுமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதில் பொதுப் பிரிவினருக்கான தரவரிசை பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த தொசிதா லட்சுமி என்ற மாணவி முதலிடத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நிலஞ்சனா என்ற மாணவி இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் என்ற மாணவர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசையில் பொதுப் பிரிவில் முதலிடம் பிடித்து அசத்திய செங்கல்பட்டு மாணவி தொசிதா லட்சுமி ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் மாணவி கூறியதாவது, "நான் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 598 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். ஐந்து பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் கூறினார். இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்ட போது பொதுப் பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்து படிக்க உள்ளேன் எனவும், அந்த துறையில் சிறுவயதில் இருந்தே தனக்கு அதிக ஆர்வம் இருந்ததால், அத்துறையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.

எனது பெற்றோர் படிப்பில் கண்டிப்பாக இல்லாமல் உறுதுணையாக இருந்ததால் தான், நான் நன்றாக படித்து இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்துள்ளேன் எனவும், பொதுவாக மருத்துவம், பொறியியல் தான் படிக்க வேண்டும் என்பது இல்லை. யாருக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ அந்த துறையை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம் என தெரிவித்தார்.

மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுத்துப் படித்தால் அதில் நன்றாகப் படித்து முன்னேற முடியும் எனவும் அவர் கூறினார். மேலும், அனைவரும் படிப்பை மட்டும் உற்று நோக்காமல் விளையாட்டு மற்றும் மற்ற துறைகளிலும் ஈடுபட வேண்டும் எனக் கூறினார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொலைபேசி மூலம் தன்னை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட்-ஆப் மதிப்பெண் அதிகரிக்குமா? - கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.