ETV Bharat / state

மின்சார பேருந்துகள்; கோவை, திருச்சி, மதுரை மக்களுக்கு அமைச்சர் சொன்ன நற்செய்தி! - minister sivasankar - MINISTER SIVASANKAR

Minister Sivasankar: மின்சாரத்தில் இயங்கும் 500 பேருந்துகள் வாங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு, முதல் 100 பேருந்துகளுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

புதிய பேருந்துகள் இயக்கம், அமைச்சர் சிவசங்கர்  செய்தியாளர் சந்திப்பு
புதிய பேருந்துகள் இயக்கம், அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 1:58 PM IST

கோயம்புத்தூர்: கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோவை மண்டலம் சார்பில் 20 புறநகர் பேருந்து மற்றும் ஒரு நகர்ப்புற பேருந்தை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று(ஜூலை 17) துவக்கி வைத்தார்.

அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பு (Credit -ETV Bharat TamilNadu)

தொடர்ந்து பல்வேறு போக்குவரத்து கழக உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறுகையில்,"தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை இயக்க முதல்வர் நிதி ஒதுக்கி, அவை பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன.

கோவையில் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட கோவை மண்டலத்தில் 21 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், 20 புறநகர் பேருந்துகளும் ஒரு நகர்ப்புற பேருந்தும் அடங்கும். இதேபோல் கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட உதகை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளிலும் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது" என்றார்.

புதிய பேருந்துகள்: தொடர்து பேசிய அவர், "மொத்தம் 7,200 புதிய பேருந்துகள் தமிழக அரசால் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருக்கிறது. அதில் முதல்கட்டமாக 1000 பேருந்துகள் தேர்தலுக்கு முன்பாகவும், இந்த வாரத்திற்குள் 300 பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

அதனைத் தொடர்ந்து புதிய பேருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பேருந்துகளை வழங்க, வழங்க மக்கள் பயன்பாட்டிற்கு படிப்படியாக கொண்டுவரப்படும். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அதிக பேருந்துகள் வாங்காததால், இருந்த பழைய பேருந்துகளை மாற்றுவதற்கான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மின்சார பேருந்து: மின்சாரத்தில் இயங்கும் 500 பேருந்துகள் வாங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு, முதல் 100 பேருந்துகளுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் முடிக்கப்பட்டு முதல் 100 பேருந்துகள் சென்னையிலும், அடுத்த 400 பேருந்துகள் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வரும்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அதிக விபத்துகள் நடப்பதாக மக்களிடமிருந்து புகார் வந்துள்ளது. அதுகுறித்து போக்குவரத்து துறை துணை ஆணையரைக் கொண்டு விசாரணை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எங்கே தேவைப்படுகிறதோ, மக்களின் கோரிக்கையை ஏற்று, பிரச்சினை ஏற்படும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும் "மினி பேருந்துகள் குறித்த கருத்துக்களை அரசுக்கு தெரிவிப்பதற்கு காலம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 22ஆம் தேதி உள்துறை செயலாளர் தலைமையில் அதுகுறித்து கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள வரைவு அறிக்கை முழுமை செய்யப்பட்டு, முதலமைச்சரின் அனுமதி பெறப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும்.

கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள புதிய பேருந்து நிலையத்தில் முறையாக பேருந்துகள் உள்ளே வருவதில்லை என்ற புகார் பல்வேறு மக்கள் அமைப்புகள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தோடு ஆலோசனை மேற்கொண்டு இந்த பேருந்து நிலையம் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவா குரு பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கள்ளச்சாராய விவகாரம்; கள்ளக்குறிச்சியில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.