சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது புதிய அறிவிப்புகளை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார்.
— N.Kayalvizhi Selvaraj (@Kayalvizhi_N) June 25, 2024
ஆதி திராவிடர் நலத்துறை புதிய அறிவிப்புகள்:
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீட்டில் புதிய விடுதிகள் கட்டுதல்.
- விடுதி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த சமையலறை மூலம் உணவு வழங்குதல் மற்றும் அமுத சுரபி திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- விடுதி மாணவர்களுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் படுக்கை உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வழங்குதல்.
- உண்டி உறைவிட பள்ளிகளை பழங்குடியினர் தேவைகளின் அடிப்படையில் ரூ.13 கோடி ஒதுக்கீட்டில் மறு சீரமைத்தல்.
— N.Kayalvizhi Selvaraj (@Kayalvizhi_N) June 25, 2024
- பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயலும் மாணவர்களின் தனி திறனை வளர்த்துக் கொள்ள திறன் சார்ந்த திட்டங்கள்.
- உயர் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உயர்திறன் ஊக்கத்திட்டத்திற்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
- முழு நேர முனைவர் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்க தொகை திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
- தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்திற்கு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- பழங்குடியினர் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
— N.Kayalvizhi Selvaraj (@Kayalvizhi_N) June 25, 2024
- புதிய பொருளாதார முன்னேடுப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- முதலிப்பாளையம் மற்றும் ஈங்கூர் தொழிற்பேட்டை அலகுகளை ரூ.50 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல்.
- வீடற்ற பழங்குடியினருக்கு ரூ.70 கோடி நிதியில் வீடுகள் கட்டித் தருதல்.
- பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தன்னிறைவு அடையச் செய்தல்.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்திற்கான நெறிமுறை மற்றும் பயிற்சிக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- பழங்குடியின மக்களின் குடியிருப்புகளை இணைப்பதற்காக அணுகுசாலை வசதிகள் ரூ.50கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்துதல்.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை தொழில் முனைவோராக ஊக்குவிக்கும் வகையில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்துதல்.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்வியல் விழா ரூ.3 கோடியில் நடத்தப்படும்.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்களின் தரவுகளை ரூ.1.50 கோடி செலவில் மின் பதிப்பாக்கம் செய்தல்.
இதையும் படிங்க: தரைப்பாலங்கள் முதல் நகரும் படிக்கட்டு வரை.. ரூ.1,000 கோடியில் புதிய அறிவிப்புகள்.. முழு விவரம் இதோ! - TN ASSEMBLY Session 2024