ETV Bharat / state

"மலைக்கிராமங்களில் புதிதாக 25 அவரச கால இருசக்கர ஆம்புலன்ஸ் கொண்டு வரப்படும்" - மா.சுப்பிரமணியன் அறிவிப்பு! - TN ASSEMBLY Session 2024 - TN ASSEMBLY SESSION 2024

TN Assembly Meeting 2024: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அமைச்சர் மா சுப்பிரமணியன் புகைப்படம்
அமைச்சர் மா சுப்பிரமணியன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 4:13 PM IST

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய அறிவுப்புகளை இன்று வெளியிட்டார்.

  • ரூ.32 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு இருதய பாதிப்பை சரி செய்யும் வகையில் இருதய உள்ளூடுருவி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு முழுவதும் கருப்பைவாய் புற்றுநோயைத் தடுக்கும் வகையில், கர்ப்பிணி பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும்.
  • தமிழ்நாட்டில் 25 ஆரம்பச் சுகாதார மையங்கள், 25 நகர்ப்புற ஆரம்பச் சுகாதார மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 100 ஆரம்பச் சுகாதார மையம் புதிதாக தமிழ்நாட்டில் அமைப்பதற்கான வேண்டுகோளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வைக்க உள்ளோம்.
  • ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் மலைக்கிராமங்களில் 25 அவரச கால இருசக்கர ஆம்புலன்ஸ் கொண்டு வரப்படும்.
  • நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மூலம் 2.61 லட்சம் நபர்கள் உயிர் பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதற்காக ரூ.228 கோடி அரசு செலவு செய்துள்ளது.
  • தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலம் 488 தொழிற்சாலைகளில் பணிபுரியும் 2,94,000 நபர்கள் மருத்துவ உதவி பெற்றுள்ளனர்.
  • புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கும் வகையில் ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் 2.60 லட்சம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு 76 ஆயிரம் நபர்களுக்கு ஆரம்பக் கட்ட புற்றுநோய் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
  • நாய் மற்றும் பாம்புக் கடிக்கான மருந்து 2,286 ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ளது.
  • கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலம் 1.47 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர்.
  • கடந்த 11 மாதத்தில் இறந்த 199 நபர்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • சுகாதாரத்துறை சார்பில் உள்ள வழக்குகள் எல்லாம் விரைவில் களையப்பட்டு புதிதாக 7,412 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட உள்ளது.

இதையும் படிங்க: கொலை வழக்கில் விடுதலையான திமுக முன்னாள் எம்எல்ஏ; மேல்முறையீட்டுக்கு பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு! - DMK EX MLA Ranganathan case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.