சென்னை: சிறுகனிமங்கள் குத்தகை உரிமம் வழங்க இணையதளத்தின் மூலம் பொது ஏலம் விடும் வகையில், தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட ஆட்சியர் சிறு கனிமங்கள் குத்தகை உரிமம் தொடர்பாக டெண்டரை வெளியிடுவார்.
இதற்கான டெண்டர் ஆவணங்களை சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் உதவி இயக்குனர் தயார் செய்ய வேண்டும். முன்னதாக, டெணடர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் உதவி இயக்குனர் தயார் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து, குத்தகை உரிமம் தொடர்பான பொது ஏல அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இதில் கனிமம் உள்ள வட்டம் மற்றும் கிராமத்தின் பெயர், சர்வே எண், என்ன வகையான கனிமம் உள்ளது உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும். மேலும், டெண்டர் விதிகளின்படி ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு குத்தகை உரிமம் வழங்கப்படும்.
இதையும் படிங்க: சட்ட விரோத மணல் விற்பனை வழக்கு; அமலாக்கத்துறை சம்மனுக்கு நீதிமன்றம் தடை விதிப்பு..!