ETV Bharat / state

அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கி... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் முறையீடு என்ன? - chennai news in tamil

State Govt Advocate Salary Case: முன்னாள் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாக்கி கட்டண தொகையான 2.39 கோடி ரூபாய் 4 வாரங்களில் வழங்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

சென்னைஉயர் நீதிமன்றம்
சென்னைஉயர் நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 7:22 PM IST

சென்னை: தமிழக அரசுக்காக பணியாற்றி வரும் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டண பில்களை முறையாக வழங்கவில்லை எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண நடைமுறைகளை தாமதமின்றி மேற்கொள்ள பொதுத்துறை செயலரை சிறப்பு செயலராக நியமித்து அரசு உத்தரவிட்டு இருந்தது.

அப்போது, கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் 15 வரை அரசு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்து இருந்த 4 ஆயிரத்து 638 கட்டண பில்களில் 943 பில்கள் சரிபார்க்கப்பட்டு, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 8 பில்களுக்கான கட்டணங்கள் மட்டும் சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஒரு சதவீத பில்களை கூட வழங்காமல் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினர். பின்னர், இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த புதிய நடைமுறையில் வேறு ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் அவற்றை ஆக்கப்பூர்வமான வகையில் சரி செய்வது குறித்தும் இந்த அறிக்கையில் விளக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (ஜன. 25) நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தாக்கல் செய்த அறிக்கையில், முன்னாள் தலைமை வழக்கறிஞர், முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணங்களில் 23.60 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாகவும், தற்போதைய அரசு வழக்கறிஞர்களுக்கான 673 கட்டண பில்களில், 199 பில்களுக்கான கட்டணங்கள் 10 நாட்களில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாக்கி கட்டண தொகையான 2.39 கோடி ரூபாய் 4 வாரங்களில் (30 நாட்களில்) வழங்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் உறுதி அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: நடிகர் இளவரசு டிசம்பர் 12ஆம் தேதி எங்கு இருந்தார்? - செல்போனை டிராக் செய்ய ஐகோர்ட் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.