சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுவிலக்குப் பிரிவினை பலப்படுத்தும் விதமாக புதிதாக இயக்குனர் பதவி உருவாக்கப்பட்டு அதற்கு கார்த்திகா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஈரோடு வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில், மதுவிலக்கு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் புதிதாக இயக்குனர் பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 10 பேரிடம் 5 நாட்கள் தீவிர விசாரணை! - Armstrong murder case