சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னதாக, தமிழ்நாடு அரசு நிர்வாக ரீதியிலான சில மாறுதல்களை செய்யும் வகையில் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 13 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் அமுதா நேற்று (மார்ச் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- 'சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி தேன்மொழி காவல்துறை பயிற்சி பள்ளி கூடுதல் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திருச்சி வடக்கு துணை ஆணையராக இருந்த அன்பு சென்னை ரயில்வே காவல்துறை எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு துணை ஆணையர் வனிதா சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- அதேபோல் கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ரோகித் நாதன், மதுரை தெற்கு துணை ஆணையர் பாலாஜி, நாகை கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி அதிவீரபாண்டியன் ஆகியோரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- அதேபோல் அரக்கோணம் ஏஎஸ்பி ஆக இருந்த யாதவ் கிரிஷ் அசோக் எஸ்பி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு, திருப்பூர் தெற்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அதேபோல், உத்தமபாளையம் ஏஎஸ் பிஆக இருந்த மதுகுமாரி எஸ்பி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு, மதுரை வடக்கு சட்ட ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின், திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா, அருப்புக்கோட்டை ஏஎஸ்பி காரத் கரூண் உத்தவ் ராவ் ஆகியோருக்கும் எஸ்பியாக பதவி உயர்வு' வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய குடியுரிமை பெற தேவையான ஆவணங்கள் என்ன? விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?