சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் மகிழ்ச்சிகரமான சகோதர, சகோதரிகள் தங்களின் அன்புத் தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த, அன்பான மற்றும் சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்கள்.
வறுமையற்ற, பிணியில்லாத, கல்வியறிவின்மை போக்க, வீடற்றவர்கள் நிலை மாற மற்றும் பாகுபாடுகள் இல்லாத வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டியெழுப்புவதற்காக நரேந்திர மோடி அவர்கள் தனது 3வது ஆட்சிப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். பிரதமருக்கு நாடு முழுவதும் ஒரே குடும்பம் என்பதும், தமிழ்நாட்டு மக்கள் அவரது இதயத்தில் வாழ்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
தமிழ் மக்கள் அவரை நேசிக்கிறார்கள். தங்களின் இதயத்தில் பிரதமர் வாழ்கிறார் என்பதை அவர் அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். பிரதமரின் தலைமையில் நாடும் மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் அறிவார்கள். கடவுள் அவருக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளைக் கொடுத்து, தேசத்தின் நலனுக்கான அவரது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை வழங்கட்டும்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்த்துக்கள் பிரதமர் நரேந்திர மோடி. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றதன் மூலம் பிரதமராக, அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பராமரிக்கவும், கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்தவும், மாநிலங்களின் உரிமைகளை மதிக்கவும், நமது ஜனநாயகத்தை பாதுகாக்கவும் உண்மையான உணர்வோடு செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம்" என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்களின் முழு லிஸ்ட்! - 2024 NEW CABINET MINISTER