ETV Bharat / state

அரசு பேருந்து முன்பதிவு.. 60 நாளாக மாற்றம்! - Pre Booking Facility

Tamil Nadu State Transport Corporation: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் 30 நாட்களிலிருந்து 60 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Chennai
சென்னை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 8:02 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக 15.03.2024 முதல் பயண முன்பதிவு காலம் 30 நாட்களுக்குப் பதிலாக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மேற்கண்ட வசதியைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.