ETV Bharat / state

திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை! - LIQUID NITROGEN in Food items - LIQUID NITROGEN IN FOOD ITEMS

Liquid Nitrogen: திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 10:04 PM IST

சென்னை: திரவ நைட்ரஜன் உள்ளடக்கிய ஸ்மோக் பிஸ்கட்கள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுரை ஒன்றை நேற்று வெளியிட்டது. இதன்படி, பெற்றோர் குழந்தைகளுக்கு ஸ்மோக் பிஸ்கட் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-இன் படி திரவ நைட்ரஜன் ஒரு செயலாக்க உதவியாக உறைதல் தன்மையுள்ள பொருட்களான பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்களில் உறைதல் பணியினை மேற்கொள்ள மட்டுமே உதவுகிறது.

மேலும், திரவ நைட்ரஜன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுப் பொருட்கள் தரம் மற்றும் உணவு சேர்க்கைகள்) ஒழுங்குமுறை, 2011-இன் படி Packing Gas மற்றும் Freezant ஆக மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் 2006, பிரிவு 38 (10)-இன் படி உணவு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த நியமன அலுவலர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-இன் படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உயிருக்கு உலை வைக்கும் ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ஸ்மோக் பீடா : மருத்துவர்களின் எச்சரிக்கை.! - Smoke Biscuit Side Effects

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.