ETV Bharat / state

ரூ.1,001 ரயில்வே துறைக்கு அனுப்பும் தமிழக காங்கிரஸ்.. செல்வப்பெருந்தகை கூறுவது என்ன? - Selvaperunthagai - SELVAPERUNTHAGAI

Selvaperunthagai on Railway Fund: ரயில்வே துறை தமிழகத்திற்கு 1,000 ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதால், மக்களிடம் கையேந்தி 1 ரூபாய் கூடுதலாக போட்டு 1,001 ரூபாயாக ரயில்வே துறைக்கு காசோலை மூலம் அனுப்ப உள்ளோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 10:08 PM IST

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வசந்தகுமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, வசந்தகுமாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செல்வப்பெருந்தகை பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

அதற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை கூறுகையில், “தமிழக அரசை மத்திய அரசு தொடந்து புறக்கணித்து வருகிறது. நியாயமான விதத்தில் நிதியும் ஒதுக்கவில்லை. தமிழகத்தை பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

ரயில்வே துறையில் ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சார்ந்த மாவட்ட, வட்டார தலைவர்கள் எல்லாம் மக்களிடம் கையேந்தி ஒரு ரூபாய் கூடுதலாக போட்டு ஆயிரத்து ஒரு ரூபாயை ரயில்வே துறைக்கு திருப்பி அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம். தேர்தல் வரை பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை ஏற்றாமல், தற்போது அனைத்து விலைகளையும் ஏற்றிவிட்டது. சுங்கச்சாவடிகளில் ஐந்து முதல் ஏழு விழுக்காடுகள் கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள்.

மகாராஷ்டிராவில் பல கோடி செலவில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை ஆறு மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் நொறுங்கி விழுந்திருக்கிறது, இதுதான் மோடி அரசின் இலட்சணம். இதுவரை சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்தது குறித்து மத்திய அரசிடமிருந்தோ, மாநில அரசிடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை.

மத்திய அரசு உலகத் தலைவர்களின் பெருமையை சிதைக்கிறார்கள். தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி நடக்கும்போது, கருணாநிதி ஆட்சி நடக்கும் போது ஏராளமான சிலைகள் நிறுவப்பட்டு இருக்கிறது. அவை இன்று வரை எத்தனை சுனாமி, கடல் சீற்றம் வந்தாலும் இடிந்ததில்லை, எடுத்துக்காட்டு திருவள்ளுவர் சிலை.

1,001 ரூபாய்கான காசோலை
1,001 ரூபாய்கான காசோலை (Credits- ETV Bharat Tamil Nadu)

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கள் கூட தாக்கப்பட மாட்டார்கள், பாதுகாப்பாக மீனவர்கள் இருப்பார்கள் என கூறினார்கள். தற்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைதாவது தொடர் கதையாக உள்ளது. குஜராத் மீனவர்களை மத்திய அரசு பாதுகாக்கும், ஆனால் தமிழக மீனவர்களை வேடிக்கை தான் பார்க்கும்.

அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்தவர் இந்திரா காந்தி என அண்ணாமலை கூறுகிறார். இந்திரா காந்தி பற்றி பேசுவதற்கு நரேந்திர மோடிக்கு கூட தகுதி கிடையாது. நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் இந்திரா காந்தி பற்றி பேசுகிறார்கள். இந்திரா காந்தி இரும்பு பெண்மணி, துர்கா தேவி என வாஜ்பாயே பாராட்டியுள்ளார். அதை முதலில் அண்ணாமலை படிக்க வேண்டும். அரைவேக்காட்டுத்தனமாக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது.

எமர்ஜென்சி ஏன் கொண்டுவரப்பட்டது என்று பல விளக்கங்கள் இருக்கிறது. இந்திரா காந்தி நாட்டு மக்களிடம் வெளிப்படையாக வருத்தத்தை தெரிவித்தார். தவறு நடந்தால் நாட்டு மக்களிடம் வெளிப்படையாக பேசுபவர்கள் தான் தலைவர்கள். பாஜக தலைவர் ஒரு தவறைக் கூட ஒப்புக்கொள்ளமாட்டார்கள், மக்களிடம் மன்னிப்பும் கேட் கமாட்டர்கள்” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: உலக அரசியல் பயிற்சிக்காக லண்டன் புறப்பட்ட அண்ணாமலை.. உற்சாகமாக வழியனுப்பி வைத்த பாஜகவினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.