ETV Bharat / state

முகவரி வழங்கிய காங்கிரஸ் கட்சிக்குப் பச்சைத் துரோகம் செய்த விஜயதாரணி - கடுமையாகச் சாடிய காங்கிரஸ் குழுச் சட்டமன்ற குழுத்தலைவர் ராஜேஷ் குமார்! - குழுத்தலைவர் ராஜேஷ் குமார்

Vijayadharani MLA: நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகக் காங்கிரஸ் கமிட்டி சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார், முகவரி வழங்கிய காங்கிரஸ் கட்சிக்குப் பச்சைத் துரோகம் செய்துவிட்டார் விஜயதாரணி என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற குழுத்தலைவர் ராஜேஷ் குமார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 10:45 PM IST

Updated : Feb 24, 2024, 11:01 PM IST

தமிழக காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற குழுத்தலைவர் ராஜேஷ் குமார்

திருநெல்வேலி: தமிழகக் காங்கிரஸ் கமிட்டி சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "காங்கிரஸ் கட்சி தாய்க்குலம் என்ற அடிப்படையில் விஜயதாரணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கியது. விஜயதாரணிக்கு முகவரியைக் கொடுத்தது காங்கிரஸ் கட்சி. சென்னை சேர்ந்தவராக இருந்த நிலையிலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, 2011ஆம் ஆண்டு முதல் மூன்று முறை போட்டியிடச் செய்தது.

காங்கிரஸ் கட்சிக்குப் பச்சைத் துரோகம் செய்துவிட்டு, முழுக்க முழுக்க சுயநலத்தோடு பாஜகவில் இணைந்துள்ளார் விஜய்தாரணி. காங்கிரஸின் கொள்கை வேறு, பாஜகவின் கொள்கை வேறு. இரு கொள்கைகளும் ஒரு விதத்திலும் ஒத்துப் போகாது. காங்கிரஸ் கொள்கையைப் பின்பற்றிய விஜயதரணி பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார் என்றால், அது மோசமான செயலாகும். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய விஜயதாரணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

எதிர்க்கட்சி எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் குதிரைப் பேரம் செய்து எம்எல்ஏக்களை தங்களுடைய இயக்கங்களுக்கு அழைத்துச் சென்று மற்ற எம்எல்ஏக்களைப் பிடிக்கும் செயலை பாஜக செய்து வருகின்றனர். கொள்ளை புறமாகச் செய்யும் பாஜகவின் செயல் தமிழகத்தில் ஒருபோதும் பலிக்காது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜயதாரணி பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவர் டெபாசிட் இல்லாத அளவிற்கு எங்களது கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம். விஜயதாரணி வெளியே சென்றதால் எங்களுக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது.

கட்சியில் உழைப்பவர்கள் அதிகமாக உள்ளனர். பெண் என்ற முறையில் தான் அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவருக்குப் பல எதிர்ப்புகள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவருக்கு மட்டுமே சீட்டுக் கொடுக்க வேண்டும் எனப் போராட்டங்கள் நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு பாஜகவிற்குச் சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை 133 வருடங்களைத் தாண்டிய பெரிய கடல். காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜனநாயகம் வேறு எங்கும் கிடையாது.

மத்திய அரசாங்கம் ஆள் பிடிக்கும் வேலையைச் செய்து வருகிறது. பல மாநிலங்களில் ஆள் பிடிக்கும் வேலையை நிறைவேற்றி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு சிறப்பாக நடந்து வருகிறது. மாநிலக் கட்சிகளை மதிப்பளித்து இந்தியா கூட்டணியில் தொகுதிகள் வழங்கி வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு மத்தியில் உள்ள மோடி அரசை முடிவுக்குக் கொண்டுவரும் ஆண்டாக அமையும். ராகுல் காந்தி தலைமையில் நல்லாட்சி அமையும். அகில இந்திய அளவில் தொகுதி பங்கேற்று என அமைக்கப்பட்ட குழு சுமுகமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டர் மதிக்கும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும். நெல்லை, தென்காசி உள்ளிட்ட எங்களுக்கு பலம் வாய்ந்த தொகுதிகளைக் காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது. சுமூகமான உறவு இருந்து வருகிறது. எங்கள் சிறப்பு வாய்ந்த தொகுதிகள் எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும். பாண்டிச்சேரியில் உள்ள தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

ஒன்பதரை ஆண்டுகளாக மோடி தமிழகத்திற்கு வந்து கொண்டு தான் இருக்கிறார். இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மோடி வருகையினால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. மத்திய அரசு தமிழக அரசை முற்றிலும் வஞ்சிக்கிறது. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்தியில் உள்ள மோடி அரசு நடந்து கொள்கிறது.

மத்திய அரசு தமிழக மக்களை வேண்டுமென்றே புறந்தள்ளுகிறது. தமிழக மக்கள் தகுந்த பாடத்தைக் கொடுக்க வேண்டும். யாருக்கு வாக்களித்தோம் என்று தெரியும் வகையில் உள்ளது விவி பேட் முறை. புதிய தொழில்நுட்பம் சந்தேகத்தை ஏற்படுத்தும். வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது எங்களுக்கும் பெரிய சந்தேகம் உள்ளது" என்று தெரிவித்தார்.

Last Updated : Feb 24, 2024, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.