ETV Bharat / state

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி காலமானார் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - Papammal died - PAPAMMAL DIED

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல்நலக்குறைவால் இன்றிரவு காலமானார். அவருக்கு வயது 108. இவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுடன் பாப்பம்மாள் பாட்டி
முதல்வர் ஸ்டாலினுடன் பாப்பம்மாள் பாட்டி (Credits - MK STALIN X PAGE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2024, 11:00 PM IST

சென்னை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே - தேக்கம்பட்டியைச் சார்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (108) பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக இன்றிரவு (செப். 27) காலமானார்.

இவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திமுக முன்னோடியும், கடந்த செப் 17ம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில், பெரியார் விருது பெற்றவருமான பாப்பம்மாள் அவர்கள் 108 அகவையில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரான அண்ணா, கருணாநிதி ஆகியோர் மீது பற்றுக் கொண்டு, திமுக தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர். கடந்த 1965ம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டக்களங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர்.

கடந்த 1959ம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பம்மாள் கடந்த 1964ம் ஆண்டு காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், பின்னர் தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார்.

பின்னர் கடந்த 1965ம் ஆண்டிலேயே மாதர் சங்கத் தலைவராகச் செயல்பட்டு, கிராமப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டார். கடந்த 1970ம் ஆண்டு தொடங்கி 45 ஆண்டுகாலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக உழவர் விவாதக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.

தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர். பாப்பம்மாள் அவர்களின் வாழ்வையும், தொண்டையும் போற்றும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 2021ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்த பெண் வீட்டார்.. திருமண நாளில் கணவர் தற்கொலை!

அப்போது, “உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!" என்று வாழ்த்தினேன். திமுக முப்பெரும் விழாவில், “ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளம்" என மனம் நெகிழப் பாராட்டி மகிழ்ந்திருந்தேன். ஆனால், இன்று சொல்லொணாத் துயரத்தில் நம்மையெல்லாம் ஆழ்த்தி விட்டு அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

தலைமை அலுவலகத்திலும், எனது இல்லத்திலும் பாப்பம்மாள் அவர்களைச் சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும். என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். பாப்பம்மாள் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், திமுக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.