ETV Bharat / state

நெல்லை தூய்மைப் பணியாளர் உயிரிழந்த விவகாரம்: முதலமைச்சர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! - Nellai Corporation Employee died - NELLAI CORPORATION EMPLOYEE DIED

M.K.Stalin Compensation Announced for Corporation Employee died: நெல்லையில் பணியின் போது மரத்திலிருந்து தவறி விழுந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மற்றும் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்தினர்
முதலமைச்சர் மற்றும் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்தினர் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 1:33 PM IST

திருநெல்வேலி: நெல்லையை அடுத்த பாளையஞ்செட்டிகுளம் வீரப்பன் காலனியைச் சேர்ந்த முனீஸ்வரனின் 3-வது மகன் பாலசுப்பிரமணியன்(24). இவர் பாளையங்கோட்டை மண்டலத்தில் சுய உதவிக்குழு மூலமாக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அங்குள்ள அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில், மரத்தின் மீது ஏறி கிளைகளை வெட்டியபோது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அதில், பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியனை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்ட சக ஊழியர்கள், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியன் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல வரி வசூல் மைய கட்டடத்தில் மரக்கிளைகளை வெட்டும்போது தவறி விழுந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டல சாந்திநகர் வரிவசூல் மைய கட்டடத்தில், கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 10 மணியளவில், அன்னை இந்திரா சுய உதவிக்குழுவின் தூய்மைப் பணியாளராகப் பணி புரிந்து வந்த முனீஸ்வரன் என்பவர் மகன் பாலசுப்பிரமணியன்(24), மரக்கிளையை வெட்டும்போது, எதிர்பாராத விதமாக தவறிவிழுந்து, பலத்த காயத்துடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் (ஆக.18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

தற்போது, உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தாலும் விடுதலையாவதில் சிக்கல்? - சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.