ETV Bharat / state

"பாஜக கூட்டணி உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை".. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகி விலகல்! - பாஜக

G. K. Vasan: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக இன்று அறிவித்த நிலையில், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்து வந்த டி.என். அசோகன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ்
தமிழ் மாநில காங்கிரஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 9:32 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட உள்ள நிலையில் பாஜக தரப்பில் தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்கப்படும் எனத் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் முதல் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் தன்னை இணைந்துள்ளது. இந்த கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று (பிப்.26) அறிவித்தார்.

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் டி.என். அசோகன் தன்னை அந்த பொறுப்பில் இருந்தும் மற்றும் கட்சியினுடைய அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விடுவிக்கும்படி தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி.கே. வாசனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், தனது தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி எனவும் அவரைத் தொடர்ந்து நானும் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து கொண்டு செயலாற்றி வந்துள்ளேன் எனவும் அதன்பிறகு தங்களது தலைமையையும் நான் ஏற்றுக்கொண்டு தற்பொழுது வரை தங்களின் தலைமைக்குக் கீழ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இன்றுவரை பணியாற்றி வந்தேன்.

ஆனால் தற்பொழுது உள்ள அரசியல் சூழலில் தாங்கள் எடுத்துள்ள பாஜக கூட்டணி என்பது தனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை. எனவே தன்னை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விடுவிக்கும்படியும் கடிதத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன் எனக் கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விண்வெளி ஆராய்ச்சியில் குவியப்போகும் வேலை வாய்ப்பு - மயில்சாமி அண்ணாதுரை சொல்வது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.