ETV Bharat / state

பறக்கும் விமானத்தில் திருவாரூர் பயணி செய்த சம்பவம்.. மன்னித்துவிட்ட சென்னை ஏர்போர்ட் போலீஸ்..! - passenger smoked in flight - PASSENGER SMOKED IN FLIGHT

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கழிவறைக்குள் சென்று புகை பிடித்த திருவாரூர் பயணியை விமான பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை விமான நிலையம் -கோப்புப்படம்
சென்னை விமான நிலையம் -கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 7:42 PM IST

சென்னை: குவைத் நாட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 178 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாரூக் (42) என்ற பயணி, தனது இருக்கையை விட்டு அடிக்கடி எழுந்து, விமான கழிவறைக்கு சென்று வந்தார்.

அப்போது அவரிடம் புகை பிடித்ததற்கான வாசனை வீசியது. இதை சக பயணிகள், விமான பணிப்பெண்ணிடம் தெரிவித்தனர். இதை அடுத்து விமான பணிப்பெண்கள், பயணி ஃபாரூக்கை விசாரித்தனர். அப்போது அவர், நான் புகை பிடிக்கவில்லை என்றும் சகப் பயணிகள் என் மீது வீண் பழி சுமத்துகின்றனர் என்றும் கூறினார். ஆனால் அவர் வாயிலிருந்து புகை பிடித்ததற்கான வாசனை வந்து கொண்டு இருந்தது.

இதை அடுத்து விமான பணிப்பெண்கள், தலைமை விமானியிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக தலைமை விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அனுப்பி, பாதுகாப்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி விமானம் நேற்று மதியம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தரை இறங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, பயணி ஃபாரூக்கை சுற்றி வளைத்து பிடித்து, பாதுகாப்புடன் சுங்க சோதனை மற்றும் குடியுரிமை சோதனைகளை முடித்துவிட்டு, விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். அதன்பின்பு ஃபாரூக்கை, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாரூக், குவைத்தில் இரண்டு ஆண்டுகள் டிரைவர் ஆக வேலை செய்துவிட்டு, விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறேன்.. தான் தெரியாமல் அந்த தவறை செய்து விட்டேன். என்னை மன்னித்து விட்டு விடுங்கள். என் மீது வழக்கு போட்டால், நான் மீண்டும் வேலைக்கு, குவைத் செல்ல முடியாது, என்று கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதை அடுத்து போலீசார் பயணி ஃபாரூக்கை கடுமையாக எச்சரித்து, இதைப் போன்ற தவறை இனிமேல், விமானத்தில் ஒரு காலத்திலும் செய்ய மாட்டேன் என்று, மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினர். அதன் பின்பு நேற்று இரவு பயணி ஃபாரூக்கை விடுவித்து, சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: தெற்கு ரயில்வே இன்ஜினியரை 48 மணி நேரம் சைபர் அரெஸ்ட்டில் வைத்த போன் கால்..சென்னையில் விசித்திர வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.