ETV Bharat / state

வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டியில் முதல் பரிசு வென்ற பௌணர்மி! - Vedandhavadi Koothandavar festival - VEDANDHAVADI KOOTHANDAVAR FESTIVAL

Vedandhavadi Koothandavar festival 2024: கூத்தாண்டவர் கோயில் தேர்திருவிழாவை முன்னிட்டு, திருநங்கைகள் தாலி கட்டுதல் மற்றும் அழகி போட்டி நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. இதில், சென்னையைச் சேர்ந்த பௌர்ணமி என்பவர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 1:21 PM IST

திருவண்ணாமலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கூத்தாண்டவர் திருக்கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 'கூத்தாண்டவர் திருவிழா' 20 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

அதன்படி, 2024ஆம் ஆண்டு கூத்தாண்டவர் திருவிழா கடந்த மாதம் 5ஆம் தேதி மகாபாரத சொற்பொழிவுடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த கூத்தாண்டவர் திருவிழாவிற்காக திருவண்ணாமலை, சென்னை, மும்பை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான திருநங்கைகள் வேடந்தவாடியில் குவிந்து வருகின்றனர்.

19ஆம் நாளான நேற்று திருக்கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து ஊர்வலமாக வந்து சாமிக்கு படைத்தல், பெண் அழைப்பு நிகழ்ச்சி, திருநங்கைகளுக்கான தாலி கட்டும் நிகழ்ச்சி, அதனைத்தொடர்ந்து திருநங்கைகளுக்கான அழகி போட்டிகள் விமர்சையாக நடைபெற்றது.

திருநங்கைகளுக்காக நடைபெற்ற இந்த அழகி போட்டியில் ஏராளமான திருநங்கைகள் விதவிதமாக உடை அணிந்து தங்கள் அழகி நடந்து காண்பித்து மக்களைக் கவர்ந்தனர். இந்த அழகி போட்டியில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த திருநங்கைகள் சென்னையைச் சேர்ந்த பௌர்ணமி முதல் பரிசையும், சேலத்தைச் சேர்ந்த மிதுளா இரண்டாவது பரிசையும், தஞ்சாவூரைச் சேர்ந்த ஜில்லு மூன்றாவது பரிசையும் பெற்றனர்.

இந்த அழகி போட்டியினை திருவண்ணாமலை, வேடந்தவாடி, மங்கலம், அவலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அழகி போட்டியை கண்டு மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: மோடியின் சர்ச்சை பேச்சு: மத மோதல்களை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி மீது சென்னையில் புகார்..! - Complaint Against PM Modi

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.