ETV Bharat / state

ஆசிரியர் தின கொண்டாட்டம்: மேளதாளத்துடன் வரவேற்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! - Tirupattur Teachers Day Celebration

Tirupattur Teachers Day Celebration: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேளதாளம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டத்துடன் மாணவர்கள் ஆசிரியர்களை வரவேற்றனர்.

மேளதாளத்துடன் வரவேற்கப்பட்ட ஆசிரியர்கள்
மேளதாளத்துடன் வரவேற்கப்பட்ட ஆசிரியர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 8:47 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பழைய மாணவர்கள் சார்பில் அப்பள்ளியில் பணிப்புரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை புதுப்பேட்டை பஸ் நிலையத்திலிருந்து மேளதாளத்துடன், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் உட்பட நாட்டுப்புற கலைகள் மூலம் ஊர்வலமாக அழைத்து வந்து மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மேளதாளத்துடன் வரவேற்கப்பட்ட ஆசிரியர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்று பள்ளி வளாகம் முன்பு மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பில் 100க்கு 100மதிப்பெண் பெற்ற 6 மாணவர்கள், 100க்கு 99 மதிப்பெண் பெற்ற 13 மாணவர்கள் மற்றும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இங்கு 10ஆம் வகுப்பு படித்து திருப்பத்தூர் மாதிரி பள்ளியில் 11, 12ஆம் வகுப்புகள் பயின்ற தற்போது ஜே இ இ தேர்வில் வெற்றி பெற்று சென்னை ஐஐடி கல்லூரியில் பயின்று வரும் மாணவன் மோகன் குமார், நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் பயின்று வரும் மாணவர் விஜயராஜேந்திரன் மற்றும் இப்பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியரும், 2014ஆம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற நீலகண்டன் ஆகியோருக்கு இந்த ஆசிரியர் தினத்தில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி அன்பழகன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர் சங்கத் தலைவர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஆசிரியர் தினத்தை கேக் வெட்டி, ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக இந்த நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “யுபிஎஸ்சி மாணவர்களே மாநில புத்தகத்தை தேடி படிக்கின்றனர்”- ஆளுநருக்கு அன்பில் மகேஷ் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.