ETV Bharat / state

அதிரடி ஆய்வில் தெரியவந்த 5 போலி மருந்தாளுனர்கள்! மெடிக்கல் ஷாப்களுக்கு சீல் - Pharmacies Sealed of fake Pharmacy

Pharmacies Sealed of fake Pharmacist: திரும்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் கண்ணகி மருந்தகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் 5 மெடிக்கலுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆய்வில் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் கண்ணகி  மற்றும் போலீசார்
ஆய்வில் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் கண்ணகி மற்றும் போலீசார் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 8:54 PM IST

திருப்பத்தூர்: திரும்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் சின்ன மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் உதயகுமார்- மணிமேகலை தம்பதியினர். இவர்களுக்கு கவியரசு (9) இவர் கதிரம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பொம்மிக்குப்பம் பகுதியில் உள்ள சபரி மெடிக்கலுக்கு சென்று ஊசி போட்டு உள்ளார்.

மேலும் மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் தோற்று ஏற்பட்டு இருந்ததால் அடிக்கடி மெடிக்கலுக்கு சென்று ஊசி போட்டு வந்துள்ளனர். இந்நிலையில் டெங்கு அதிகமாக நிலையில் மாணவனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அங்கு ரத்த அணுக்கள் குறைபாட்டால் மருத்துவர்கள் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் கண்ணகி மேற்கொண்ட திடீர் ஆய்வு (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் கண்ணகி, பொம்மிக்குப்பம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொம்மிக்குப்பமில் இருக்கும் பிரகாசம் என்பவருக்கு சொந்தமான சபரி மெடிக்கல், பாலாஜிக்கு சொந்தமான பாலாஜி மெடிக்கல், கார்த்திக் என்பவருக்கு சொந்தமான எஸ்.கே.என், என மூவரும் மருத்துவ படிப்பு படிக்காமல் போலியாக மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.

இதையும் படிங்க: தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த 6 மருந்தகங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து!

இதையடுத்து இணை இயக்குனர் கண்ணகி ஆய்வுக்காக வருவதை அறிந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த நிலையில் இணை இயக்குனர் கண்ணகி தலைமையில் மூன்று மெடிக்கலுக்கும் சீல் வைக்கப்பட்டது. அதேபோல் பசிலிகுட்டை பகுதியில் தனஜெயம் என்பவருக்கு சொந்தமாக சிவசக்தி மெடிக்கலும் மற்றும் நந்தினி என்பவருக்கு சொந்தமாக நந்தினி மெடிக்கல் என்ற பெயரில் மெடிக்கல் இயங்கி வந்தது.

இவர்களும் அதே போல் மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்துள்ளது தெரிவந்துள்ளது. இந்த நிலையில் நந்தினி என்பவரை மட்டும் இணை இயக்குனர் கண்ணகி பிடித்து திருப்பத்தூர் கிராமிய போலீசாரிடம் ஒப்படைத்தார். மீதம் நான்கு பேர் தப்பி ஓடிய நிலையில் 5 மெடிக்கலுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனரின் உதவியாளர் வெங்கடேசன், மருந்து ஆய்வாளர் சபரிநாதன், மருந்தாளுனர்கள் குரு ராகவேந்திரன், கார்த்திக், மற்றும் வருவாய் துறையினர் மற்றும் திருப்பத்தூர் கிராமிய போலீஸர் ஆகியோர் உடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.