ETV Bharat / state

விருப்பம் இல்லாமல் தாய் மாமன் மகனுக்கு நிச்சயம் செய்ததால் பெண் தற்கொலை! - THIRUPPATHUR WOMEN SUICIDE - THIRUPPATHUR WOMEN SUICIDE

Tirupattur Women Suicide Death: ஏலகிரி மலை பகுதியில் வசிக்கும் பிரியதர்ஷினி என்னும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரை தாய்மாமன் மகனுக்கு அவரது தாய் நிச்சயம் செய்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 11:04 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அத்தனவூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ்-ரத்தினம் தம்பதியினரின் மகள் பிரியதர்ஷினி வயது (21). இவர் கல்லூரி முடித்துவிட்டு வீட்டில் உள்ள நிலையில், மங்களம் பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவரின் மகன் ராஜேஷ்(25) என்பரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

தற்கொலை எண்ணத்தை கைவிடுக
தற்கொலை எண்ணத்தை கைவிடுக (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த காதல் விவகாரம் பெண்ணின் தாய் ரத்தினத்துக்கு தெரிய வர அவருடைய தாய் மாமன் மகன் விஷ்ணு (24) என்பவருக்கு அவசர அவசரமாக நிச்சியம் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக பிரியதர்ஷினி, இன்று அவரது பெற்றோர்கள் திருப்பத்தூருக்கு, வந்து மளிகை பொருட்கள் வாங்கி வர சென்ற போது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஏலகிரி மலை போலீசார் உடலை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தனக்கு பிடித்த பையனை காதலித்து, வந்த நிலையில் தாய் மாமன் மகனுக்கு,ம், தனக்கும் தாய் நிச்சயம் செய்ததால், பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: விமான நிலையத்தில் தவிக்கும் கேன்சர் நோயாளி.. வங்கதேச தம்பதிக்கு நேர்ந்த சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.