திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக க.தர்பகராஜ் இருந்து வரும் நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு மக்களின் குறைகளை மனுவாக பெற்ற மாவட்ட ஆட்சியர், திடீரென தனது பெயரில் ஒரு புகாரை பதிவு செய்யுமாறு கூறினார்.
அப்போது அவர் கூறுகையில், 'தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டு அதில் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது' எனக் கூறினார். மேலும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தன் பெயரில் போலியான ஆவணத்தை வைத்திருக்கும் அடையாளம் தெரியாத நபர் குறித்து, திருப்பத்தூர் நகர காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவும் அளித்துள்ளார்.
இதனையடுத்து அந்த அடையாளம் தெரியாத இணையவாசி குறித்து காவல்துறையினர் கடும் சோதனையில் இறங்கியுள்ளனர். மேலும் இதுபோன்ற சைபர் கிரைம் புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியரின் பெயரில் இந்த போலி இன்ஸ்டாகிராம் கணக்கு வழக்கு பெரும் கவனம் பெறுகிறது. இந்நிலையில் அந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அந்த மர்ம நபர் கண்டறிப்பட்டு, சட்டத்தின் முன் நிற்க வைக்கபப்படுவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பெண்கள் தான் குறி! சென்னையை அதிரவைக்கும் சைபர் மோசடி