ETV Bharat / state

துபாய் சென்ற 16 நாளில் இளைஞர் மர்ம மரணம்.. கதறி அழும் குடும்பத்தார்! - TIRUPATHUR YOUTH DIED ISSUE

வெளிநாட்டு வேலைக்காக துபாய் சென்ற திருப்பத்தூர் இளைஞர் மூன்றே நாளில் உயிரிழந்து விட்டதாக வந்த தகவல், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் மற்றும் உறவினர்கள் அழும் காட்சி
உயிரிழந்த இளைஞர் மற்றும் உறவினர்கள் அழும் காட்சி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 1:00 PM IST

Updated : Oct 18, 2024, 1:11 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சூர்யா (20). படித்து முடித்துவிட்டு சூர்யா வேலையில்லாமல் இருந்து வந்த நிலையில், இவருக்கு, சென்னையில் வெளி நாட்டிற்கு ஆட்களை அனுப்பி வைக்கும் பிரபல தனியார் நிறுவனத்தின், சப்ஏஜென்டாக பணிபுரியும் சத்தியமூர்த்தி என்பவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர், அவர் மூலம் வெளிநாட்டிற்குச் சென்று வேலை செய்யும் மோகத்தில் இருந்த சூர்யா, ரூ.1 லட்சம் கொடுத்து பிளம்பர் வேலைக்காக கடந்த 3ஆம் தேதி துபாய் சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து துபாய் சென்ற மூன்றே நாளில், அதாவது அக்டோபர் 6ஆம் தேதி சூர்யாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், மேலும் அவர் சிகிச்சையில் உள்ளார் எனவும் உடன் பணிபுரியும் நபர்கள் சூர்யாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதனையறிந்த உறவினர்கள் கவலையில் இருந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆயிரம் கிலோ வெடிமருந்துடன் அசால்ட்டாக வந்த லாரி.. சீர்காழி அருகே பரபரப்பு!

இந்த நிலையில், இன்று திடீரென சிகிச்சையில் இருந்த சூர்யா உயிரிழந்து விட்டதாக உறவினர்களுக்கு திரும்பவும் தகவல் வந்த சம்பவம் உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்பொழுது வரை சூர்யா உயிரோடு இருக்கிறாரா? அல்லது உண்மையிலேயே மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தாரா? என்கிற முழு தகவல் அறிந்து கொள்ள முடியாமல் அவருடைய குடும்பத்தார் கண்ணீர் மல்க கதறி அழுது வருகின்றனர்.

தற்போது, இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சூர்யாவின் உண்மை நிலை குறித்து விசாரணை மேற்கொண்டு, அவர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். மேலும், இளைஞரின் உடலை தாயகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Oct 18, 2024, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.