திருநெல்வேலி: கடந்த 2020ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த 35 மற்றும் 32 வயது நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டு, திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (ஆகஸ்ட் 28) போக்சோ நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி சுரேஷ் முன்னிலையில் வந்தது. அப்போது, கொடூரமான முறையில் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, தலா 20 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கினார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறுமி தரப்பில் அரசு வழக்கறிஞராக போக்சோ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உஷா ஆஜரானார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கடலூரில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது