ETV Bharat / state

"ஆண் பேராசிரியர்களுடன் இணைத்து பேசுகின்றனர்" - நெல்லை மாணவிகள் வேதனை.. கல்லூரி முதல்வர் அளித்த விளக்கம்? - students alleged clg administration - STUDENTS ALLEGED CLG ADMINISTRATION

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதனை எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவிகளை ஆண் போராசிரியர்களுடன் சேர்த்து தவறாக பேசுவதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ராணி அண்ணா மகளிர் கல்லூரி நுழைவு வாயில்
ராணி அண்ணா மகளிர் கல்லூரி நுழைவு வாயில் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 4:07 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பழைய பேட்டைக்கு அடுத்து அமைந்துள்ளது ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி. இக்கல்லூரி கடந்த 1970ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் அண்ணாதுரையால் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு இளங்கலை, முதுகலை என சுமார் 20க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் உள்ளன. இங்கு 4,500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மாணவிகள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த வகையில், இக்கல்லூரி அரசு கல்லூரி என்பதால் அரசு சார்பாக வழங்கப்படும் அனைத்து வகையான சலுகைகளும் இங்கே வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தை விட கல்லூரி நிர்வாகம் "மாணவியர் நலன் பாதுகாப்பு சங்கம்" மற்றும் "பெற்றோர் ஆசிரியர் கழகம்" உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், "கல்விக்கட்டணமாக அரசு ரூ.1,365 நிர்ணயம் செய்துள்ள நிலையில், கல்லூரி நிர்வாகம் ரூ.2,850 வரை வசூல் செயகின்றனர். அது மட்டுமல்லாமல், தனியார் புத்தகக் கடையில் இருந்து கையேடுகளை வாங்கி வந்து அதனை கண்டிப்பாக வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : வலுக்கும் கண்டனம்.. மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்தில் நடந்தது என்ன? - annapoorna owner srinivasan

தொடர்ந்து பேசிய மாணவிகள், "தேர்வு எழுதுவதற்கு பேப்பர் பயன்படுத்தலாம் என்ற விதிமுறை உள்ள நிலையில், தேர்வு எழுத தனி நோட்டு வாங்க வேண்டும் எனவும், ஒரு நபர் 7 நோட்டுகள் வரை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி கல்லூரியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் நோட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை எதிர்த்து கேட்கும் மாணவிகளை இங்கு பணிபுரியும் ஆண் பேராசிரியருடன் இணைத்து அவதூறாகப் பேசி வருகின்றனர்.

இது தொடர்பாக மாணவிகள் சுமார் 77க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் கல்லூரி முதல்வருக்கும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கும் புகார் கடிதத்தை அனுப்பினோம். அக்கடிதம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. அதில், பேராசியர்கள் மாணவிகள் மத்தியில் மன்னிப்பு கேட்டனர்.

ஆனாலும், தொடர்ந்து மாணவிகளுக்கும், இங்கு பணியாற்றக்கூடிய ஆண் பேராசிரியர்களுக்கும் இடையே தவறான உறவுகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகளை பரப்பி வருகின்றனர்" என மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பிரேமலதாவிடம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, "கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாணவிகள் கூறுவது தவறான தகவல். அதுபோன்று அரசுக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலித்து வருகிறோம். கையேடு விவகாரத்தில் குறிப்பிட்ட சில கையேடுகளை படித்தால் அதிக மதிப்பெண் வாங்க முடியும் என்பதற்காக பேராசிரியர்கள் சில கையேடுகளை பரிந்துரை செய்வார்கள். அதேநேரம், யாரும் கட்டாயப்படுத்துவதில்லை" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: " மூணு மாசமா பென்சன் வரல".. மதுரை காமராஜர் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.