ETV Bharat / state

டூட்டி நேரத்தில் 'புஷ்பா' படம் பார்த்த போலீஸ் அதிகாரி; நெல்லை கமிஷனரிடம் வசமாக சிக்கினார்! - TIRUNELVELI

ரோந்து பணியின்போது போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் 'புஷ்பா 2' படம் பார்த்த தகவல் மேல் அதிகாரிக்கு தெரிந்து, அவர் டோஸ்விட்ட சம்பவம் திருநெல்வேலியில் நிகழ்ந்துள்ளது.

போலீஸ் உதவி கமிஷனர், புஷ்பா 2 போஸ்டர் மற்றும் கமிஷனர் மூர்த்தி
போலீஸ் உதவி கமிஷனர், புஷ்பா 2 போஸ்டர் மற்றும் கமிஷனர் மூர்த்தி (Photo Credit - ETV Bharat Tamil nadu and Allu Arjun X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2024, 7:28 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாநகர பகுதியில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் பொருட்டு மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இரவு நேரங்களில் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று டிஐஜியும் மாநகர போலீஸ் கமிஷனருமான(பொறுப்பு) மூர்த்தி மேற்பார்வையில் நெல்லை மாநகர சரகத்தில் இரவு ரோந்து பணியில் பெண் இன்ஸ்பெக்டர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நெல்லை டவுன், நெல்லை ஜங்ஷன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 இடங்களிலும் பெண் இன்ஸ்பெக்டர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு தலைமையாக உதவி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பணியில் இருந்தார். இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணி அளவில் உதவி ஆணையர் தனது ரோந்து வாகனத்தில், நெல்லை ஜங்ஷன் உடையார்பட்டி பகுதியில் உள்ள பிரபல தியேட்டருக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அங்கு புஷ்பா-2 திரைப்படம் பார்ப்பதற்காக உதவி ஆணையர் சென்றதாகவும், ஜீப்பில் காவலுக்கு டிரைவரை அமர்த்திவிட்டு போனதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கமிஷனர் மூர்த்தி, மைக்கில் வந்து உதவி கமிஷனரை கூப்பிட்டுள்ளார். ஆனால் சுமார் 15 நிமிடங்கள் வரையிலும் உதவி ஆணையர் திரும்ப கமிஷனரை தொடர்பு கொள்ளவில்லை.

இதனால் கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார், உதவி ஆணையரை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவே, பதறியடித்துக்கொண்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்த உதவி கமிஷனர், மைக்கில் கமிஷனரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது கமிஷனர் 'எங்கே இருக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'தச்சநல்லூர் பகுதியில் ஒரு பிரச்சினை என்று சொன்னார்கள். அதனால் அங்கு நிற்கிறேன்' என்றுகூறி சமாளித்துள்ளார்.

ஆனால் உண்மை நிலவரத்தை ஏற்கனவே அறிந்திருந்த நெல்லை போலீஸ் கமிஷனர் மூர்த்தி, "ஓபன் மைக்கில் இரவு பணி பார்க்காமல் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்து கொண்டிருக்கிறீர்கள். மாநகரில் இன்று இரவு பணியில் முழுவதுமாக பெண் இன்ஸ்பெக்டர்கள் இருக்கும் நிலையில், நீங்கள் எந்தவித பொறுப்பும் இன்றி இப்படி செயல்படுவது நியாயமா?" என்று கூறி கடிந்து கொண்டுள்ளார்.

இந்த உரையாடல்கள் அனைத்தும் ஓபன் மைக்கில் நடந்ததால் மாநகரம் முழுவதும் போலீசாரிடையே இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த வாரம் இரவு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதலுக்கு கும்பல் ஒன்று முயன்றது. இந்நிலையில் பெண் இன்ஸ்பெக்டர்கள் இரவு ரோந்து பணியில் இருந்த நேரத்தில், உயர் அதிகாரி ஒருவர், பணி நேரத்தில் புஷ்பா-2 படம் பார்க்க தியேட்டருக்கு சென்று உயரதிகாரியிடம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா மீது பாயும் கட்சி நடவடிக்கை? திருமாவளவன் சொல்லியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.