ETV Bharat / state

பஸ்ஸில் இனி சாதிய பாடல்களை ஒலிக்கச் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் கைது - திருநெல்வேலி காவல்துறை அதிரடி - Not to Play Caste Songs in Bus

Caste Songs in Bus: பேருந்துகளில் சாதிய பாடல்களை ஒலிக்க செய்தால் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல் கூட்டம்
ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல் கூட்டம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 3:22 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. சாதிய ரீதியிலான மோதல் மற்றும் இருதரப்பாக பிரிந்து மோதிக் கொள்வது என்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பேருந்து நிலையங்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றில் மாணவர்கள் இடையே நடைபெறும் மோதலை தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பாக திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில், தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்கள் உடனான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாணவர்களிடையே நடைபெறும் மோதல் குறித்த தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிப்பது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்துவது போன்ற சந்தேகம் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மாணவர்களிடையே நடைபெறும் சிறு சிறு மோதல்கள் குறித்த தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சாதிய ரீதியிலான மோதல் தடுக்கும் வகையிலும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மாநகரப் பகுதிகளில் பேருந்துகளில் ஜாதி ரீதியிலான பாடல்களை ஒலிக்க கூடாது என்றும், அது போன்ற பாடல்களை அழித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இதனை மீறி சாதிய ரீதியான பாடல்கள் ஒலிக்க செய்தால் ஒட்டுநர், நடத்துநர் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே நெல்லையில் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்கள் சாதிய வேறுபாடு காரணமாக மோதி கொள்ளும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற அறிவுரைகள் மற்றும் விதிமுறைகள் கொண்டுவரப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "பள்ளி மாணவர்கள் சண்டையை சாதி சண்டையாக மாற்ற வேண்டாம்" - சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.