திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சிந்துப்பூந்துறையைச் சேர்ந்தவர் மருத்துவர் கணேசன். இவர் மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து, நெல்லை மாநகராட்சியில் ஏழைகளின் மருத்துவராக திகழ்ந்துள்ளார்.
திருநெல்வேலி போன்ற மாநகரப் பகுதியில் கால மாற்றத்துக்கு ஏற்ப பெரும்பாலான மருத்துவர்கள் ரூ.500 வரை என பல மடங்கு கட்டணத்தை உயர்த்தினாலும் கூட, மருத்துவர் கணேசன் கடந்த பல ஆண்டுகளாக மக்களிடம் 30 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 50 ரூபாய் தான் கட்டணமாக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல, கரோனா காலகட்டத்தில் தினமும் ஆயிரம் பேருக்கு மருத்துவம் பார்த்துள்ளார். மேலும், கட்டணம் ஏதும் இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். எனவே, தான் இவர் நெல்லையின் மக்கள் மருத்துவர் என்றும் அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவர் கணேசன் நேற்று இரவு உயிரிழந்தார். இதனால் மருத்துவர் கணேசனிடம் சிகிச்சை பெற்ற மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை மக்களுக்கு நற்செய்தி: மதுரை எம்.பி சொல்வது என்ன? - Madurai MP SU VENKATESAN