ETV Bharat / state

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை - பழனியில் நேர்ந்த சோகம்! - SUICIDE ATTEMPT

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்த முல்லை நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட இருவர்
தற்கொலை செய்துகொண்ட இருவர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 10:54 PM IST

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்த முல்லைநகரைச் சேர்ந்தவர் இளங்குமரன் (57). இவர் பழனி கான்வென்ட் ரோடு பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி ரேணுகாதேவி (54) அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களின் மகன் வினித்(24) கோயம்புத்தூரில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகள் தேன்மொழி(17) தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று(அக் 23) இவர்களின் வீடு மதியம் வரை திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே, பழனி டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இத்தகவலறிந்து போலீஸ் துணை சூப்பிரண்டு தனஞ்செயன், இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இளங்குமரன், ரேணுகாதேவி, தேன்மொழி ஆகிய மூவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க : "போலி என்.சி.சி முகாம் வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை" - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

பின்னர் இத்தகவலறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் சம்பவ இடத்துக்கு வந்து, வீட்டை பார்வையிட்டு சென்றார். அதைத்தொடர்ந்து திண்டுக்கல்லில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலையை கைவிடுக
தற்கொலையை கைவிடுக (Credits - ETV Bharat Tamil Nadu)

கொலைக்கான காரணம் : போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மனைவி, மகளை கொன்றுவிட்டு இளங்குமரன் தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் குடும்ப பிரச்னையா அல்லது கடன் தொல்லையா? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.