ETV Bharat / state

தூத்துக்குடியில் அமோனியா வாயு வெளியேறி விபத்து - ஒருவர் உயிரிழப்பு! - THOOTHUKUDI AMMONIA LEAK ACCIDENT - THOOTHUKUDI AMMONIA LEAK ACCIDENT

THOOTHUKUDI AMMONIA LEAK ACCIDENT: தூத்துக்குடி தனியார் உரத்தொழிற்சாலைக்குச் சொந்தமான துணை நிறுவனத்தில் அமோனியா வாயு வெளியேறி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமோனியா  வாயு வெளியேறி விபத்துக்குள்ளான தொழிற்சாலை
அமோனியா வாயு வெளியேறி விபத்துக்குள்ளான தொழிற்சாலை (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 7:42 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தனியார் உரத்தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தனியார் உரத்தொழிற்சாலைக்குச் சொந்தமான துணை நிறுவனத்தின் தொழிற்சாலையில் சோடா ஆஸ் மற்றும் அமோனியம் குளோரைடு ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், அந்த துணை நிறுவனமான தொழிற்சாலையில் அமோனியா பைப்லைனில் ஏற்பட்ட கசிவை சரி செய்யும் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது.

இந்த பணியில் மஞ்சள் நீர் காயல் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன், தன்ராஜ், மாரிமுத்து விஷ்ணு, ஹரி பாஸ்கர் ஆகிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அம்மோனியா வாயு அதிக அளவு கசிந்து ஏற்பட்ட விபத்தில் ஹரிகரன் சம்பவ இடத்தில் பலியானர். மேலும் தனராஜ், மாரிமுத்து, விஷ்ணு, ஹரி பாஸ்கர், ஆகியோர் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மற்றும் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமணியம் ஆகியோர் ஆலைக்குள் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனால் தொழிற்சாலைக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கடன் வாங்கும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம்.. தூத்துக்குடி மன்மதன் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.