“நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சரி இல்லை”- கனிமொழி பேச்சு! - mp kanimozhi - MP KANIMOZHI
Kanimozhi MP: நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சரி இல்லாத நிலையில், தேர்தல் நேரத்தில் பிரதமரும், ஆளும்கட்சியினரும் மத காழ்ப்புணர்ச்சியை தூண்டக்கூடிய வகையில் செயல்பட்டனர் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
Published : Jul 6, 2024, 4:15 PM IST
தூத்துக்குடி: கர்ப்பிணி தாய்மார்களுக்கான புதிய அல்ட்ராசோனோகிராபி (USG Machine) சேவை, கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது, புதுக்கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவரிடம், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சரி இல்லாத நிலையில், தேர்தல் நேரத்தில் பிரதமரும், ஆளும்கட்சியினரும் மத காழ்ப்புணர்ச்சியை தூண்டக்கூடிய வகையில் செயல்பட்டனர்.
ஒடிசாவில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பொழுது, தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றனர். மக்களை பிரித்து ஆளக்கூடிய அவர்களை வன்முறைக்கு தள்ளக்கூடடிய அனைத்தையும் செய்வது ஆளும் பாஜக. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று கூறி வந்த நிலையில், எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்த பின்னர், பிரதமர் அதை பற்றி பேசத் தொடங்கியுள்ளார்” என்றார்.
விக்கிராவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “தோல்வி பயத்தால் வேண்டாம் என நினைத்து இருக்கலாம். வேறு ஏதேனும் காரணம் இருந்தால் அதிமுகவை தான் கேட்ட வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'கைதான 8 பேர் யார்..?' ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிக்கும் பிரச்சனை.. தமிழக பகுஜன் சமாஜ் வைக்கும் கோரிக்கை!