ETV Bharat / state

தூத்துக்குடி கடல் வாணிபத்தின் பாரம்பரிய அடையாளமான தோணித் தொழில் புத்துயிர் பெறுமா? - Thoothukudi Canoe work

தூத்துக்குடி கடல் வாணிபத்தின் பாரம்பரிய அடையாளமான தோணித் தொழிலை புதுப்பித்து மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு உடன் வர்த்தகம் நடைபெற மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என தோணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தோணி, உபால்டு ராஜ் மெக்கன்னா, லசிங்டன்
தோணி, உபால்டு ராஜ் மெக்கன்னா, லசிங்டன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 9:32 PM IST

தூத்துக்குடி: சோழர், பாண்டிய ஆட்சிக் காலத்தில் இருந்தே தமிழகத்துக்கும், மாலத்தீவுக்கும் இடையே பாரம்பரியமாக கடல்வழி வாணிபம் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பாய்மரத் தோணிகள் மூலமாக சரக்குப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தது. இத்தொழிலை இன்று வரை பாதுகாத்து பொதுமக்களுக்கு குறைவான விலையில் பொருள் கிடைக்கும் வகையில் தோணி தொழில் நடைபெறுகிறது.

ஏற்றுமதி: தூத்துக்குடியில் இருந்து மிளகாய் வத்தல், வெங்காயம், உருளைக்கிழங்கு, கருவாடு, சிமெண்ட், பீடி இலை, மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்,சல்லி, மணல் உள்ளிட்ட பொருள்கள் தோணிகள் மூலம் லட்சத்தீவு, கொழும்பு, மாலத் தீவு, இலங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. நாள்தோறும் பல தோணிகள் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து சரக்கு ஏற்றிச் சென்றுள்ளன.

பின்னடைவை சந்திக்கும் தோணி தொழில்: தூத்துக்குடி பழைய துறைமுகத்தை தங்கும் தளமாகக் கொண்டு 12 மாதங்கள் 200 முதல் 450 டன் கொள்ளளவு கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட 40 தோணிகளில் வர்த்தகம் நடைபெற்ற நிலையில் நாளடைவில் 7, 8 மாதங்களாக குறைந்து 25 தோணிகளை கொண்டே வர்த்தகம் நடைபெறுகிறது. இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இத்தகைய சிறப்பு வாய்ந்த தோணிப் போக்குவரத்து பல்வேறு காரணங்களால் பின்னடைவைச் சந்தித்தது.

லசிங்டன் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

12 மாத வர்த்தகம்: நலிவடைந்த தோணித் தொழிலுக்கு புத்துயிர் அளிக்க தூத்துக்குடி தோணி உரிமையாளர் சங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இலங்கைக்கு 12 மாதங்கள் வர்த்தகம் நடைபெற அரசு தயாராக உள்ள நிலையில், லட்சத்தீவுக்கும், மாலத்தீவுகளுக்கும் 12 மாதங்கள் வர்த்தகம் நடைபெற அரசு ஒத்துழைக்க வேண்டும் என தோணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலநிலையால் மாறுபடும் தோணி போக்குவரத்து : தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுகளுக்கு காய்கறிகள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. பொதுவாக, தோணி போக்குவரத்து கடல் சீதோஷன நிலையை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. மே 1 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 30 ஆம் தேதி வரையில் கடினமான காலநிலை காணப்படுவதால் தோணி இயக்கப்படுவதில்லை. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் சுமுகமான காலநிலை நிலவுவதால் தோணி போக்குவரத்து நடைபெறும்.

கடல் வாணிபத் துறை அனுமதி: தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு தோணி போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இலங்கைக்கு சுமுகமான காலநிலை நிலவும் காலங்களில் மட்டும் தோணி இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்துக்கு கடல் வாணிபதுறை வாய்மொழி அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் இதற்கான உத்தரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இதே போன்று மாலத்தீவுக்கும், லட்சத்தீவுக்குக்கும் 12 மாதங்கள் தொழில் செய்யக்கூடிய அளவில் உருவாக்கி தர வேண்டும் என்று தோணி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: "இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம்" - பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா எச்சரிக்கை!

இது குறித்து தோணி உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் உபால்டு ராஜ் மெக்கன்னா ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், “தோணி தொழில் பாரம்பரிய தொழிலாகும். கப்பலுக்கும், கண்டேய்னருக்கும் இடையே நெருக்கமான போட்டி இருந்தாலும், தோணியின் மூலமாக செல்லக்கூடிய சரக்குகள் குறைவாக இருக்கும். குறைந்த விலையில் சரக்குகளை கையாளுவதால் நம் நாட்டிற்கு அதிக வருவாய் கிடைக்கும்.

இலங்கைக்கு 12 மாதம் தொழில் செய்து கொண்டிருந்த நிலையில், 8,9 மாதமாக மாறியது. தற்போது12 மாதமாக தொழில் செய்ய அனுமதி வழங்குவதற்கு தயாராக உள்ளனர். அதன் காரணமாக வரக்கூடிய காலங்களில் கொழும்பு துறைமுகத்திற்கு 12 மாதங்கள் தொழில் செய்ய உள்ளோம். தோணி தொழிலை மேம்படுத்த ‘சாகர்மாலா’ திட்டத்தில் மேற்கண்ட தனித் தொகையை மத்திய அரசு ஒதுக்கி தோணியினை சீரமைத்து தர வேண்டும்.

மரமும் ஸ்டீலும் கலந்த தோணி: துறைமுகத்தை மிகச் சிறப்பாக செய்து கொடுத்து அதன் மூலமாக சரக்குகள் அதிக அளவு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இரு நாடுகளுக்கும், மிகப்பெரிய பலம் தோணி தொழில். 300 ஆண்டுகளாக மரத்தாலான தோனியை வைத்து இயக்கி வந்த நிலையில், மரமும், ஸ்டீலும் கலந்த தோணியை வைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் இத்தொழிலை நம்பி இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் சீரடையும். ஆகவே, இத்தொழிலை புதுப்பித்து மாலத்தீவு, லட்சத்தீவுக்குக்கு 12 மாதங்கள் தொழில் செய்யக்கூடிய அளவில் மத்திய அரசு உருவாக்கி தர வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, இது குறித்து தோணி உரிமையாளர் லசிங்டன் கூறுகையில், “ அண்டை நாடுகளுக்கு தூத்துக்குடியில் இருந்து அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள், வீட்டு தேவையான பொருட்கள் குறைந்த விலையில் நிறைந்த சேவை செய்து கொண்டிருக்கின்றோம். முன்னதாக, பாய் மரத்தில் செய்து கொண்டிருந்த தோணி தொழில் தற்போது நவீனப்படுத்தி அனைத்து தோணிகளும் இயந்திரப்படுத்தி சிறப்பாக வணிகம் நடைபெற்று வருகிறது.

மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் தொழிலை விரிவுப்படுத்த முடியும். நம் நாட்டில் இருந்து தோணி மூலமாக மாலத்தீவு இலங்கைக்கு பொருள் சென்றடையும் போது அன்றாட தேவைக்கான பொருட்கள் விலைவாசி மிகவும் குறைவாக இருக்கும். இதனால் மக்கள் பயனடைவார்கள். ஆகவே, மாலத்தீவுக்கு 12 மாதங்களும் சென்று வர வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.