ETV Bharat / state

சொத்துவரி வசூலாக நூதன நேர்த்திக்கடன்.. பழனிக்கு பாதயாத்திரை கிளம்பிய கவுன்சிலர்! - திருமலையம்பாளையம்

Thirumalayampalayam Councilor: கோவையில் இயங்கி வரும் தனியார் கல்லூரி நிர்வாகம், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய 3 கோடி ரூபாய் சொத்துவரி வசூலாக வேண்டும் என திருமலையம்பாளையம் கவுன்சிலர் பழனி வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thirumalayampalayam Councilor
பழனிக்கு பாதயாத்திரை கிளம்பிய கவுன்சிலர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 1:49 PM IST

கோயம்புத்தூர்: திருமலையம்பாளையம் பேரூராட்சி கவுன்சிலராக வழக்கறிஞர் ரமேஷ்குமார் செயல்பட்டு வருகிறார். மேலும் திருமலையாம்பாளையம் பகுதியில் தனியார் கல்வி குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த தனியார் கல்வி நிறுவனம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நீண்ட காலமாக செலுத்த வேண்டிய ரூ.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக தெரிகிறது.

இதனால் அந்த பேரூராட்சியில் மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. வாக்களித்த மக்களின் கேள்விக்கு உறுப்பினர்கள் பதில் சொல்லாமல், பேரூராட்சி கவுன்சிலர்கள் இருந்து வரும் நிலையில், தனியார் கல்வி குழுமத்திடம் பலமுறை சொத்து வரியை செலுத்த சொல்லி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வலியுறுத்திய போதும் தற்போது வரை வரி கட்டவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தனியார் கல்வி குழுமத்தினர் 3 கோடி ரூபாய் சொத்து வரியை செலுத்த வேண்டும் என்ற வேண்டுதலுடன், கோவை திருமலையம்பாளையத்திலிருந்து பழனி மலை வரை சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு, கவுன்சிலர் ரமேஷ்குமார் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது, கையில் வேல் மற்றும் பேனருடன் வழி நெடுகிலும், தனது பயணத்தின் நோக்கம் குறித்து பேசியபடி ரமேஷ்குமார் பாதயாத்திரை செல்லுவதை, வழி நெடுகிலும் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதையும் படிங்க: குடியரசு துணைத் தலைவர் நிகழ்ச்சியில் அனுமதி மறுப்பு.. புதுவை பல்கலையில் செய்தியாளர்கள் வெளிநடப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.