ETV Bharat / state

மெரினாவில் 3வது நாள் விமான சாகச ஒத்திகை.. வானில் வட்டமிட்ட ரபேல், தேஜஸ்.. கண்டு ரசித்த சென்னை மக்கள்! - CHENNAI AIR SHOW 2024

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற 3வது நாள் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி இன்று முடிவுற்ற நிலையில், புகைகளை வெளிவிட்டுக் கொண்டு சென்றது பார்ப்பதற்கே அழகாக இருந்தது என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

விமான சாகச ஒத்திகை, ஏர்மார்ஷல் பயிற்சி கமாண்டர் நாகேஷ் கபூர்
விமான சாகச ஒத்திகை, ஏர்மார்ஷல் பயிற்சி கமாண்டர் நாகேஷ் கபூர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்திய விமானப் படையின் 92வது நிறுவன தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி வரும் அக்.6ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான ஒத்திகைகள் இன்று நடைபெற்று முடிந்தது.

மேலும், இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒத்திகையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் குடும்பங்கள், விமானப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகளின் குடும்பங்கள் ஆகியோர் ஒத்திகையைக் கண்டு ரசித்தனர். இந்த ஒத்திகையின் போது முதலில் மெரினா கடற்கரையில் தற்காலிக கட்டடம் அமைக்கப்பட்டு அந்த கட்டடத்தில் பயங்கரவாதிகள் இருந்தால் அவர்களை எப்படி கையாண்டு கட்டுக்குள் கொண்டு வருவது என தத்ரூபமாக செய்து காட்டினர்.

பின்னர் இந்தியாவின் தலைசிறந்த விமானக் குழுவான சூரிய கிரண் மற்றும் சாராம் குழுவினர் சாகசம் செய்வதில் ஈடுபட்டனர். மேலும், இந்தியாவின் விமானப் படையின் முக்கிய விமானமாகக் கருதப்படும் ரபேல், தேஜஸ் உள்ளிட்ட விமானங்களும், டகோட்டா விமானமும் இன்று சாகசத்தில் ஈடுபட்டன.

இந்த சாகசத்தின் போது விமானங்கள் இந்திய தேசிய கொடியின் வண்ணத்தில் கலர் புகையைக் கொண்டு வந்து மக்களுக்கு காட்சி அளித்தன. அத்துடன் பல்வேறு சாகங்களும் நடத்தின. விமானம் தூரத்திலிருந்து வந்து புகையுடன் வட்டம் மற்றும் இதய வடிவிலான தோற்றங்களை ஏற்படுத்தி, அங்கிருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரே நேரத்தில் 9 விமானங்கள் பறந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் சாகசத்தில் ஈடுபட்டன. வரும் 6ம் தேதி விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மெரினா கடற்கரையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த விஜய் பேசுகையில், "சென்னையில் நேரில் பார்த்தது மிக சிறப்பான அனுபவமாக இருந்தது. என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பதால் சூலூரில் உள்ள விமானத் தளத்தில் பலமுறை பார்த்திருந்தாலும், அதைவிட பிரம்மாண்டமாக சென்னையில் இருந்தது. குறிப்பாக, ரபேல் விமானம் அதிவேகமாக சென்றது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அதேபோல் சாகசத்தின் போது வட்டமாகவும், இதய வடிவில் புகை மூலமாகக் கொண்டு வந்தது பார்ப்பதற்கு அழகாக இருந்தது" என தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஹேமலதா, "விமான சாகசம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. போர் விமானங்களை இவ்வளவு அருகில் பார்த்து இல்லை. இன்று பார்த்தது வியப்பாக இருந்தது. முதல் முறையாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்க்கிறோம்" என தெரிவித்தார்.

மணலி புது நகரைச் சேர்ந்த சிறுவன் தன்வந் பேசுகையில், "ஏற்கனவே இரண்டு ஒத்திகை பார்க்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தாலும், மூன்றாவது ஒத்திகையை கண்டிப்பாக பார்க்க வேண்டுமென என்னுடைய பெற்றோரைக் கேட்டு, பார்க்க வந்திருந்தேன். விமான சாகசத்தைப் பார்க்கும் போது நேரம் போனதே தெரியவில்லை.அதேபோல, அதிக சத்தத்துடன் அதிக உயரத்துடன் சென்றது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. அது மட்டுமில்லாமல் தலைகீழாக சுற்றிக்கொண்டும், புகைகளை வெளிவிட்டுக்கொண்டே சென்றதும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க : "சென்னை விமான சாகச நிகழ்வை லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் சேர்க்க ஏற்பாடு" - ஏர் கமாண்டர் தகவல்!

இதுகுறித்து ஏர் மார்ஷல் பயிற்சி கமாண்டர் நாகேஷ் கபூர் கூறுகையில்,"விமான சாகச நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். உணவுப் பொருட்களை கடற்பரப்பில் வீச வேண்டாம். ஏனென்றால் உணவுகளைத் தேடும் வகையில், வான் சாகச நிகழ்ச்சியின் போது பறவைகள் அதிகமாக பறப்பதால் விமானங்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது.

விமான சாகச நிகழ்ச்சியைக் காண நேற்று முன்தினத்தை விட இன்று அதிகமான பொதுமக்கள் வந்து பார்த்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு வருடத்திற்கு முன்பாக டெல்லியில் நடைபெற்றது. கடந்த 2022ம் ஆண்டு சண்டிகரிலும், கடந்த ஆண்டு பிரயாக்ராஜிலும் நடைபெற்று இருந்தது.

இந்திய விமானப் படையின் நிறுவன நாளை வெவ்வேறு இடங்களில் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வருடம் தென்னிந்தியாவில் உள்ள சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தோம். அதன்படி, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றது.

சென்னையில் நடத்துவது நன்றாக இருக்கும். ஏனென்றால் நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளதால் பொதுமக்கள் பார்ப்பதற்கும், விமான சாகசம் செய்வதற்கும் ஏற்ற இடமாக இருக்கிறது. நடைபெற்று வரும் விமான சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு திருப்தியாக இருக்கிறது என்றால், விமானத்தை இயக்கும் எங்களுக்கும் முழு திருப்தியாக இருக்கும்.

விமானம் இயக்குவதில் இங்கு சிறிய இடையூறுகள் இருந்தாலும் பொதுமக்களுக்கும், பார்வையாளர்களுக்கும் திருப்தியாக இருப்பதால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 2003ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற விமான சாகசத்தைப் பார்க்க வந்த சிறுவர்களின் இரண்டு பேர் தற்பொழுது சூரிய கிரண் குழுவின் வான் சாகச விமான ஓட்டியாக உள்ளனர். விமான ஓட்டியாக இருந்த நான் அவர்களை கீழ் இருந்து பார்க்கிறேன்.

இதையும் படிங்க : பாரதமே அதிரப்போகுது; விமானப் படையின் திகைப்பூட்டும் சாகசத்திற்கு தயாரா?

இந்த வருடம் விமான சாகசத்தைப் பார்க்க வரும் இளைஞர்கள் கண்டிப்பாக விமானியாக வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதேபோல் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்கள். மருத்துவக் குழு, பாதுகாப்பு குழு ஆகியவை தயார் நிலையில் இருக்கிறது.

வரும் 6ம் தேதியன்று பார்வையாளர்கள் அதிகமாக வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக அமைத்து கொடுத்த ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிற்கும், தமிழக அரசிற்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிக மக்கள் வந்து மகிழ்ச்சியுடன் இந்த விமான சாகச நிகழ்ச்சியைப் பார்த்து மகிழ வேண்டும் என நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.