ETV Bharat / state

'பால் குடத்துடன் மியா கலிஃபா' கோயில் பேனரில் சம்பவம் செய்த இளசுகள்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு! - kanchipuram mia khalifa banner - KANCHIPURAM MIA KHALIFA BANNER

mia khalifa photo in temple festival banner: காஞ்சிபுரம் பகுதியில் வைக்கப்பட்ட கோயில் திருவிழா பேனரில் ஆபாச நடிகை மியா கலிஃபாவின் புகைப்படம் இடம் பெற்றிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் கோயில் பேனர்
காஞ்சிபுரம் கோயில் பேனர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 1:42 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயில் வளாகத்தில், ஸ்ரீ நாகாத்தம்மன் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் கோயிலுக்கு கிராம மக்கள் ஆடி மாத திருவிழா எடுத்து வருவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் நாளை ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு, நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் ஆலயத்தில் வளைகாப்பு வைபோக விழா நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் திருவிழாவை முன்னிட்டு நூதன முறையில் பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில், ஆதார் கார்டு வடிவில் பேனர் வைத்தவர்களின் புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

'எங்க பாசம் ஊரே பேசும்' என்ற வாசகங்களுடன் பேனர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அம்மன் புகைப்படங்கள் இடம் பெற்று இருக்கும் அதே வேளையில், பிரபல ஆபாசப்பட நடிகை மியா காலிஃபா மஞ்சள் உடையில் பால்குடம் எடுத்துச் செல்லும் புகைப்படம் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திருவிழாக்களில் சினிமா நடிகர்களின் புகைப்படங்கள் இடம் பெறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால், இந்த பேனரில் வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஆபாச பட நடிகை மியா கலிஃபா இடம் பெற்றிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இளைஞர்களுக்கு மியா கலிஃபா பத்தி தெரிந்திருக்கலாம், ஆனால் கிராம பெரியோர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு என்பதால் கிராம பெரியவர்களும் அதை கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்த பேனர் குறித்த புகைப்படம் வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாகறல் போலீசார் சர்ச்சைக்குரிய பேனரை அகற்றினர்.

திருவிழாவிற்காக வைக்கப்பட்ட பேனரில் ஆபாச பட நடிகை புகைப்படம் இடம்பெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சோசியல் மீடியாவில் இந்த விவகாரம் வைரல் ஆகியுள்ளது.

இதையும் படிங்க: "வயிறு நிறைந்தது, மனசும் நிறைந்தது" வயநாட்டுக்காக நடந்த மொய் விருந்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.