ETV Bharat / state

பாம்பன் பாலம்: பொறியியல், கட்டடக்கலை அதிசயம் குறித்த சிறப்புத் தொகுப்பு!

பொறியியல் மற்றும் கட்டடக்கலை அதிசயமாக திகழும் பாம்பன் பாலம், 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் ஆக வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தை பிரதிபலிக்கிறது.

author img

By Milind Kumar Sharma

Published : 4 hours ago

பாம்பன் மேம்பாலம்
பாம்பன் மேம்பாலம் (Credits-ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்தியாவில் உள்ள பந்த்ரா-ஒர்லி கடல் வழி இணைப்பு(5.6 கிமீ நீளம், 126மீட்டர் நீர் மட்டத்துக்கு மேலே), ஹஜீரா கிரீக் மேம்பாலம் (1.4 கிமீ நீளம், 25மீட்டர் நீர் மட்டத்துக்கு மேலே), விசாகப்பட்டினம்-சீத்தாம்பேட்டா ரயில்வே மேம்பாலம் (2.3 கிமீ நீளம், 20 மீட்டர் நீர் மட்டத்துக்கு மேலே), மற்றும் கட்டப்பட்டு வரும் மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு பாலம் (21.8 கிமீ நீளம், 25மீட்டர் நீர் மட்டத்துக்கு மேலே), சென்னாப் ஆறு ரயில்வே மேம்பாலம் (1.3 கிமீ நீளம், 359மீட்டர் நீர் மட்டத்துக்கு மேலே) போன்ற மேம்பாலங்கள் உள்ளிட்டவை எண்ணற்ற தொழில்நுட்ப சவால்கள் மற்றும் புவியியல் தடைகளை எதிர்கொண்ட போதிலும் பொறியியல் சிறப்பையும், புதுமையான வடிவமைப்புகளையும் வெளிப்படுத்தும் அதன் பொறியியல் மற்றும் கட்டடக்கலை திறன்களுக்கு சான்றாக தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானவையாகும்.

பொறியியல் அதிசயம்: ஆனால், பாம்பன் ரயில்வே மேம்பாலம் ஒரு பொறியியல் அதிசயமாகும். இது தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் நகரை நாட்டின் பிறபகுதிகளுடன் இணைக்கும் வகையில் பொறியியலின் குறிப்பிடத்தக்க சாதனையாக இது ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. 2.3 கி.மீ தூரம் கொண்ட இந்த மேம்பாலம் தீவுப்பகுதியான ராமேஸ்வரத்துக்கும் பிற முக்கிய நிலப்பகுதிக்கும் இடையே முக்கியமான போக்குவரத்து இணைப்பாக செயல்படுகிறது. அப்போதைய காலகட்டத்தில் மிகவும் நீளமான ரயில் மேம்பாலமாக இது திகழ்ந்தது. 1914ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போது பொருட்கள் எடுத்துச் செல்வதற்காகவும் மற்றும் பயணிகள் சேவைகளை மேற்கொள்வதற்காகவும் இது கட்டப்பட்டது. இது ஜெர்மன் பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டது. இது கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வருவதற்கு ஐந்து ஆண்டுகாலம் பிடித்தது.

இந்த மேம்பாலம் 145 கான்கிரீட் தூண்கள் தலா 15 மீ இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாலம் கப்பல்கள், படகுகள் அதன் அடியில் செல்லும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 12 மீட்டர் உயரத்தில் உள்ளது. பாலத்தின் கீழே கப்பல்கள் செல்லும்போது பாலம் மேலே தூக்கப்பட்டு வழி விடும் வகையிலான வசதியை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் பொறியியல் கட்டமைப்பானது இதை குறிப்பிடத்தக்க சாதனையாக மாற்றுகிறது.

பொருளாதாரத்துக்கு ஆதாரமாக திகழ்கிறது: இந்த மேம்பாலம் வர்த்தகம், தொழில் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியமானது மட்டுமின்றி, புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்வதற்கான பாதையாகவும் திகழ்கிறது. சுற்றுலா வாயிலாக உள்ளூர் பொருளாதாரத்துக்கு முக்கியமான ஆதாரமாக இந்த மேம்பாலம் திகழ்கிறது. கடல் உணவுகள், ஜவுளி பொருட்கள் மற்றும் இதர சரக்குகளை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வழியாகவும் உள்ளது. எனினும் அண்மை காலங்களில் பாம்பன் ரயில்வே மேப்பாலம் அரிப்பு, கட்டமைப்பு சேதம், விரிசல் மற்றும் பல பராமரிப்பு சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. இவற்றை சரி செய்ய மேம்பாலத்தை தூக்கும் வசதி மற்றும் பாலத்தின் அடிதளத்தை வலுப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்ற தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளிலும், புதுப்பிக்கும் திட்டங்களையும் இந்திய ரயில்வே செயல்படுத்தி வருவது மனதுக்கு இதமளிக்கும் வகையில் உள்ளது.

பாம்பன் ரயில் பாலம் ஒரு அடையாளச் சின்னம் மற்றும் காலத்தின் சோதனையாக நிற்கும் ஒரு பொறியியல் அதிசயம் என்று குறிப்பிடுவது சரியாக இருக்காது. இதன் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு என்பது ராமேஸ்வரத்தை நாட்டின் பிறபகுதியுடன் இணைப்பது, உள்ளூர் பொருளாதாரத்துக்கு ஆதரவு அளித்தல், பக்தர்களுக்கு வசதி அளித்தல் ஆகியவற்றை உறுதி செய்வதாகும். இந்தியா தொடர்ந்து அதன் கட்டமைப்பை முன்னெடுக்கும் நிலையில் , பாம்பன் மேம்பாலம் என்பது பொறியியலுக்கு சிறந்த முக்கியமான அடையாளமாக மனித புத்திசாலித்தனத்திற்கு ஒரு சான்றாகத் தொடர்ந்திருக்கும்.

இந்தியாவின் லட்சியத்தை பிரதிபலிக்கிறது: இந்த மேம்பாலம் உலகின் மிகவும் ஈர்க்கக்கூடிய ரயில்வே மேம்பாலங்களில் ஒன்றாக இந்திய ரயில்வே மூலம் பட்டியலிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச பொறியியல் கட்டடக்கலை தொடர்பான பிரசுரங்களில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. சிறந்த செயல்பாடு மற்றும் வணிக இணைப்புக்கு வழி ஏற்படுத்தும் வகையில் பெரும் வணிக கப்பல்கள் செல்லும் வகையில் இந்த மேம்பாலம் செங்குத்தாக 72 மீட்டர் அளவுக்கு தூக்கும் வசதியுடன் அதன் உயரத்தை அதிகரித்து நவீனமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தவிர, ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரயில் பாதையுடன் அதன் ஒருங்கிணைப்பு முழு தென் பிராந்தியத்திற்கும் ஒரு மாற்றமாக இருக்கும். சந்தேகத்திற்கு இடமின்றி, 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் ஆக வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தை இது பிரதிபலிக்கிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.