ETV Bharat / state

"கேள்வியில் உள்நோக்கம் உள்ளது"- பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்க முடியாது- சென்னை உயர் நீதிமன்றம்! - felix gerald case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 7:54 PM IST

savukku shankar issue: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட யூ-டியூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஃபெலிக்ஸ் ஜெரால்டு
ஃபெலிக்ஸ் ஜெரால்டு (credit - Etv Bharat Tamil Nadu)

சென்னை: காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ''தன்னை நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் பதியபட்டுள்ளதாகக்'' கூறியிருந்தார். மேலும், தனக்கு ஜாமீன் கிடைக்கும்பட்சத்தில், சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்கமாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவில் வழக்கறிஞர், '' மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த கேள்விகளை கேட்டுள்ளார். காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உயர் அதிகாரிகள் பெயர்களை குறிப்பிட்டு பேசியுள்ளார். தொடர்ந்து இது போன்ற செயல்களை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும், சவுக்கு சங்கரை தூண்டும் வகையில் ஜெரால்டு செயல்பட்டதாக கூறிய வழக்கறிஞர் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''பெலிக்ஸ் ஜெரால்டு கடந்த 47 நாட்களாக சிறையில் இருந்து வருகிறார். சம்பந்தப்பட்ட அந்த கருத்திற்கும், தமக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை எனவும், இதற்காக அவர் மன்னிப்பு கோருவதாகவும் விசாரணை முடிவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், இதுவரை 87 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்'' என கூறினார்.

அப்போது நீதிபதி, சம்பந்தப்பட்ட இந்த கேள்விகளை எடிட் செய்திருக்கலாம் என தெரிவித்தார். இதனை அடுத்து உத்தரவிட்ட நீதிபதி தமிழ்செல்வி, வழக்கில் மனுதாரருடைய கேள்வி உள்நோக்கம் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது. ஒரு தவறான தகவலுடன் பிரச்சினையை துண்டும் வகையில் மனுதாரர் கேள்வி உள்ளது. மேலும், மனுதாரர் ஒரு பாமரர் அல்ல எனவும், அவர் நன்கு படித்தவர் எனவே தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்யவதாக உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; மெத்தனாலை பதுக்கி விற்பனை செய்த கும்பல் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.