ETV Bharat / state

தருமபுரி வனப்பகுதியில் நடவு செய்யப்பட்ட 86,375 மரக்கன்றுகள்: வெயிலில் கருகாமல் இருக்க வனத்துறை செய்தது என்ன? - 86375 sapling planted in Dharmapuri - 86375 SAPLING PLANTED IN DHARMAPURI

Forest department watering the planted: தருமபுரி வனப்பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள 86,375 மரக்கன்றுகளை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க டிராக்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

forest department watering the planted
forest department watering the planted
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 6:03 PM IST

Updated : Apr 29, 2024, 7:33 PM IST

தருமபுரி வனப்பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள 86,375 மரக்கன்றுகள்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. தருமபுரி வனச்சரக எல்லைக்குட்பட்ட தொப்பூர் காப்புக்காடு, பாளையம் புதூர் காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதியில் வனத்துறை சார்பில் ஈட்டு நிலத்தோட்டம் திட்டத்தின் மூலம் சுமார் 12.75 ஹெக்டேர் பரப்பளவில் புங்கன், ஆயான், தேக்கு, வேம்பு, காட்டு நெல்லி, ஜம்பு நாவல், ஈட்டி, கொட்டை நாவல், இலுப்பை, அரசு, வில்வம், அத்தி, ஆல், நீர் மருது, விளா என 15க்கும் மேற்பட்ட வகைகளில் 6,375 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று நூலஅள்ளி மற்றும் ரெட்டிஅள்ளி காப்புக்காட்டில் 100 ஹெக்டேர் பரப்பளவிலும், ஏலகிரி காப்புக்காட்டில் 75 ஹெக்டேரிலும், பரிகம் காப்புக்காட்டில் 250 ஹெக்டேர், பெரும்பாலை காப்புக்காட்டில் 175 ஹெக்டேர், தொப்பூர் காப்புக்காட்டில் 100 ஹெக்டேர் என மொத்தம் 700 ஹெக்டேர் பரப்பளவில் செம்மரம், தேக்கு, ஈட்டி, பரம்பை, குடைவேல், காட்டு நெல்லி, வேங்கை, வாகை, விளா, அத்தி என 22 வகையான 70,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது

மேலும், ஏலகிரி காப்புக்காட்டில் நபார்டு திட்டத்தின் மூலம் 50 ஹெக்டேர் பரப்பளவில் செம்மரம் 10,000 மரக்கன்றுகளும் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து பருவ மழை பொய்த்த நிலையில் மரக்கன்றுகள் கருகாமல் இருக்க வனத்துறை சார்பில் கூலி ஆட்கள் மூலம் மாதத்திற்கு 5 முறை டிராக்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றி வந்தனர்.

வெயிலின் தாக்கத்திலிருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க டிராக்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்

இந்த நிலையில் தற்போது நிலவும் வரலாறு காணாத கோடை வெப்பம் நிலவுவதால் மரக்கன்றுகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த மரக்கன்றுகளைப் பாதுகாக்க தற்போது கூடுதல் தண்ணீர் ஊற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஆடுகள் மற்றும் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து மரக்கன்றுகளைப் பாதுகாக்கப் பசுமை வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். இந்தப் பணியானது மாவட்டத்திற்கு நல்ல மழை கிடைக்கும் வரை மரக்கன்றுகள் வாடாமல் இருக்க ஒவ்வொரு மாதமும் தொடரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மின்கம்பங்களில் மின்சாரம் கட்.. தீப்பந்தம் ஏந்தி போராடிய வள்ளலாகரம் ஊராட்சி மக்கள்!

Last Updated : Apr 29, 2024, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.