சென்னை: வடமாநிலத்தை தலைமை இடமாகக் கொண்ட தனியார் விண்ட் எனர்ஜி நிறுவனம் ஒன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், மூலமாக சோலார் பேணல் உற்பத்தி செய்து தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சட்டவிரோத பண பரி மாற்றங்கள் மற்றும் வரி ஏய்ப்பு செய்ததாக இந்த நிறுவனத்தின் மீது வந்த புகாரின் அடிப்படையில் சென்னை, செங்கல்பட்டு உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தைச் சார்ந்த ஒருவரது வீட்டில் ஒரு சி.ஆர்.பி.எப் காவலர் உதவியுடன் ஆறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாகவும், மேலும் சைதாப்பேட்டை சின்னமலை எல்டிஜி சாலையில் உள்ள அதே நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குப்பையில் வீசப்பட்ட மனுக்கள்.. சேலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்!
இதனிடையே, சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்களின் உதவியுடன் ஐந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாகவும், அதேபோன்று தேனாம்பேட்டை கேபி தாஸ் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும் நான்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகவும் அமலாக்கத்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது சென்னை உட்பட தமிழகத்தில் அந்த தனியார் விண்ட் எனர்ஜி நிறுவனம் செயல்படும் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், சோதனையின் முடிவிலேயே எந்தவிதமான ஆவணங்கள் கிடைத்தன என்பது குறித்தும் முழு தகவல் கிடைக்கும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்