ETV Bharat / state

நெல்லையில் நடந்ததை போன்று கோவையில் நடக்கக் கூடாது.. கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைமை கட்டளை! - Coimbatore mayor election

Coimbatore mayor election: நாளை கோவையில் நடைபெற உள்ள மேயர் தேர்தல், போட்டிகள் எதுவுமின்றி சுமூகமாக நடைபெறவும், அதுகுறித்து பார்வையிட திமுகவின் மாநில அளவிலான நிர்வாகி கோவை விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா அறிவாலயம் மற்றும் திமுக மேயர் வேட்பாளர்
அண்ணா அறிவாலயம் மற்றும் திமுக மேயர் வேட்பாளர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 9:35 PM IST

கோயம்புத்தூர்: தமிழகத்தில் நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருந்தார்.

மேலும், ராமகிருஷ்ணனை எதிர்த்து திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் மேயர் வேட்பாளராக போட்டியிட்டார். அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மேயர் தேர்தலில், திமுக வேட்பாளர் கிட்டுவை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜை திமுக கவுன்சிலர் ஒருவர் முன்மொழிந்ததும், திமுக கவுன்சிலர் பலர் பவுல்ராஜுக்கு வாக்கு செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், மொத்தம் 23 வாக்குகள் பவுல்ராஜ் பெற்றிருந்தார். இருப்பினும், திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனாலும், தாம் அறிவித்த வேட்பாளருக்கு எதிராக வாக்குகள் பதிவானது திமுக தலைமைக்கு அதிருப்தி அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) கோவையில் புதிய மேயர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. திமுக வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். நெல்லையில் நடந்த சம்பவத்தை போன்று, கோவையில் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கட்சி தலைமை, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சென்னை அறிவாலயத்தில் இருந்து முக்கியமான மாநில அளவிலான நிர்வாகி ஒருவர் கோவை விரைந்துள்ளார் என்றும், நாளை கோவையில் நடைபெற உள்ள மேயர் தேர்தலை போட்டியின்றி சுமூகமாக நடத்த அவர் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஏழு வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி; திமுக தலைமையை அதிர வைத்த நெல்லை மேயர் தேர்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.