ETV Bharat / state

தீபாவளிக்கு 14,086 சிறப்பு பேருந்துகள்.. சென்னையில் இருந்து இயக்கப்படும் விவரம் இதோ! - DIWALI SPECIAL BUS

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படக்கூடிய சிறப்பு பேருந்துகளின் விவரங்கள் குறித்த தகவலை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

பேருந்துகள் (கோப்புப்படம்)
பேருந்துகள் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2024, 5:04 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28.10. 2024 திங்கட்கிழமை முதல் 30.10. 2024 புதன்கிழமை வரை, மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து வழக்கம் போல் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தகவல் வெளியிட்டுள்ளர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28.10.2024, 29.10.2024 மற்றும் 30.10.2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகளும் என ஒட்டு மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி 2024 - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் விபரம் (28.10. 2024 முதல் 30.10.2024 வரை)

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்: திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.

இதையும் படிங்க: தவெக மாநாடு; சென்னை - விழுப்புரம் செல்ல மாற்று வழி.. திண்டிவனத்தை தவிர்க்க போலீஸ் திட்டம்?

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு: வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம். திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும்.எனவே, பயணிகள் மேற்கண்ட பேருந்து நிலையத்திலிருந்து 28.10.2024 முதல் 30.10. 2024 வரை ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், 30.10. 2024 கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 27.10. 2024 மற்றும் 28.10. 2024 ஆகிய நாட்களில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.